80 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய பாடகர் கே ஜே ஜேசுதாஸ்

பிரபல பின்னணி பாடகர் கே ஜே ஜேசுதாஸ் தனது 80 ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

1940 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி பிறந்த ஜெயசுதாஸ் தனது காந்தக் குரலால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்றால் அது மிகையல்ல. நேற்று கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தனது குடும்பத்துடன் சென்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் கே ஜே ஜேசுதாஸ்.

1961 ஆம் ஆண்டு முதல் இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் கே ஜே ஏசுதாஸ் மலையாளம் தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி, ஒரியா உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழிகளில் பாடியுள்ளார். மேலும் ஆங்கிலம், அரபி, லத்தீன் மற்றும் ரசியன் போன்ற வெளி நாட்டு மொழிகளிலும் பாடியுள்ளார்.

80-வது பிறந்த நாளைக் கொண்டாடும் பாடகர் யேசுதாசுக்கு திரைத் துறையினர் மற்றும் இசை துறையினர் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் பாடகர் ஜேசுதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“80-வது பிறந்தநாள் கொண்டாடும் பன்முக திறன் வாய்ந்த ஜேசுதாஸ்ஜிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மெல்லிசையும், ஆன்மாவை ஈர்க்கும் குரலும் அனைத்து வயதினரிடையேயும் அவரை பிரபலமாக்கியது. இந்திய கலாசாரத்துக்கு அவர் மதிப்புமிக்க பங்களிப்பை செய்துள்ளார். அவர் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களும் பாடகர் ஜேசுதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.