விவசாயத்தை காக்க தமிழ் நாட்டிலுள்ள அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றினைய வேண்டும் – ஆரி!

நெடுவாசல் போராட்ட களத்தில் கலந்து கொண்ட ஆரி நெடுவாசல் மக்களின் கோரிக்கை ஏற்று மீத்தேன் திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தினார்.தமிழ் நாட்டிலுள்ள விவசாய சங்கங்கள் அனைத்தும் அவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை கலைத்து ஒன்று சேர வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் முன்னிலையில் கோரிக்கை வைத்தார்.

மேலும் இம்மண்ணையும் விவசாயத்தையும் காக்க மாணவர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் மருத்துவராக வருவேன் நான் பொறியாளராக வருவேன் நான் கலெக்டராக வருவேன் என்கிற மனப்பான்மையை விடுத்து நாங்கள் விவசாயிகளாகவே தோன்றி இம்மண்ணில் விதைகளாவோம் என உறுதி கொள்ளவேண்டும் என்றார் அதை ஏற்றுக் கொண்ட பெற்றோர்களும் எங்கள் பிள்ளைகளை விவசாயிகளாக மட்டுமே ஆக்குவோம் என்றும், மாணவர்களும் வரும் காலத்தில் விவசாயிகளாகவே வருவோம் என்று ஆரியின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்தனர்.

இதில் நெடுவாசல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளம்விவசாயிகள் (சிறுவர் சிறுமியர்) பச்சை துண்டும் முண்டாசும் அணிந்து விவசாயம் காப்போம் ஹைட்ரோகார்பனை எதிர்ப்போம் கருத்தை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

இதில் மக்களோடும் மாணவர்களோடும் ஆரி கலந்து கொண்டு தற்போது விவசாயிகளுக்கு அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர் இந்நேரத்தில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து இந்தியாவில் இருக்கும் அனைத்து விவசாய சங்கங்களை ஒருகிணைத்து போராட வேண்டும் எனவும், அனைத்து விவசாய கடன்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தமிழ் இனமே… ! நெடுவாசல் காப்போம்!
நம் விவசாயம் மீட்போம்!