காயத்ரி ரகுமாம் இப்படிச் செய்யலாமா?

மனதில் பட்டதை பட்டென பேசும் இயல்பு கொண்ட பிரபலங்களில் நடிகை காயத்ரி ரகுராமும் ஒருவர். தற்போது அவர் பி.ஜே.பியில் முக்கியமானவராக ஜொலித்து வருகிறார். அது அவரது கொள்கை முடிவு. ஆனால் நம் தமிழ்நாட்டின் உரிமைகளும் தமிழ்மொழியின் முக்கியத்துவமும் பறிபோகும் சமயத்தில் காயத்ரி ரகுராம் மாதிரியான கலைஞர்கள் இந்தியை ஆதரிக்கும் போக்கில் நடந்து கொள்வது வேதனை அளிக்கும் விசயமாக இருக்கிறது. தமிழோடு இந்தியும் இருக்கட்டும் என்று சொல்ல வைத்து, இறுதியில் இந்தி மட்டுமே இருக்கட்டும் என்ற முடிவை நோக்கி பி.ஜே.பி செல்வது காயத்ரி ரகுராமுக்குத் தெரியவில்லையா? தெரியவில்லை என்பதாகத் தான் இருக்கிறது அவரது சமீபத்திய வார்த்தைகள்.

இதோ அவர் மோடியை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் கொடுத்திருக்கும் ஸ்டேட்மெண்ட்ஸ் தமிழ் எங்கள் வேலன் இந்தி எங்கள் தோழன் வெளிநாட்டில் மேடையேறி பேசும்போதெல்லாம் மோடி திருக்குறளை வைத்து பேசுவார் எனவே மோடி தமிழ் வளர்ப்பவர் இது போதாதென்று இந்தி மொழி கற்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக தமிழ் எங்கள் வேலன் இந்தி நம்ம தோழன் எனும் வாசகம் பொருந்திய டீ-சர்ட்டை வெளியிட்டு நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை காயத்ரி ரகு ராம்.

மேலும் பாரத பிரதமர் மோடி தமிழுக்கு எதிரானவர் அல்ல வெளிநாடு செல்லும் போதெல்லாம் தமிழ் திருக்குறள் சொல்லியே பேச ஆரம்பிப்பார். அதனால் அவர் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் இங்கே உள்ள சில அரசியல் தலைவர்கள் திருக்குறள் தெரியாமலும் தமிழும் தெரியாமலும் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று சாடியுள்ளார். காயத்ரி ரகுராமின் இப்படியான வார்த்தைகள் பி.ஜே.பியினரை உற்சாகப்படுத்தும் தான். ஆனால் அது தமிழையும் தமிழர்களையும் காயப்படுத்தும் அல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *