சூப்பர்ஸ்டாரின் ‘தர்பார்’ அனுபவத்தை தனது வாடிக்கையாளர்-களுக்காக வழங்கும் ஏர்டெல்!


ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் நேர்காணல்கள் மற்றும் திரைக்குப்பின்னால் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்கள் உட்பட ‘தர்பார்’ திரைப்பட உள்ளடக்கத்திற்கு பிரத்யேக அணுகுவசதியை இது வழங்குகிறது

• ஏர்டெல் ரீடெய்ல் ஸ்டோர்ஸ்களில் குறுகிய பதிப்பாக ‘தர்பார்’ பிராண்டுடன் கூடிய சிம்கள் கிடைக்கப்பெறுகின்றன

• ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் அதிக அளவிலான இன்டராக்டிவ் முறையிலான தர்பார் க்விஸ் (வினாடி வினா) செயல்திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் தர்பார் திரைப்பட டிக்கெட்டுகளையும் மற்றும் தர்பார் திரைப்பட நட்சத்திரங்களையும் வாடிக்கையாளர்கள் வெல்லும் வாய்ப்பை பெறுவார்கள்.

சென்னை, ஜனவரி 6, 2020: ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைகள் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான பார்தி ஏர்டெல் (“ஏர்டெல்”) ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘தர்பார்’ திரைப்படத்துடனான ஒரு பிரத்யேக கூட்டுவகிப்பு செயல்பாட்டை இன்று அறிவித்திருக்கிறது.

இந்த ஒத்துழைப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, தனது வாடிக்கையாளர்களுக்கு ‘தர்பார்’ திரைப்படத்தின் மீது வரம்பற்ற அனுபவத்தை தரும் உறுதிமொழியோடு கிளர்ச்சியூட்டும் பல சலுகை செயல்திட்டங்களின் ஒரு தொகுப்பை ஏர்டெல் அறிமுகம் செய்திருக்கிறது.

10,000-க்கும் அதிகமான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் 400-க்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளை வழங்குகின்ற ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் இத்திரைப்பட தயாரிப்பில் திரைக்குப் பின்னால் நிகழ்ந்த விஷயங்கள் உட்பட, சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் உள்ளடக்கத்திற்கு இலவச அணுகுவசதியை இதன்மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெற்று மகிழலாம்.
அத்துடன், அதிகளவு இன்டராக்டிவ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற ‘தர்பார் க்விஸ்’ நிகழ்ச்சியிலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் வாடிக்கையாளர்கள் பங்கேற்கலாம். இதன்மூலம் தர்பார் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் மற்றும் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் இவர்கள் பெறுவார்கள்.

குறுகியகால பதிப்பாக தர்பார் பிராண்டின் கீழான சிம் பவுச் மற்றும் ரீடெய்ல் பேக்குகளை ஏர்டெல் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ப்ரீபெய்டு பேக்குகள், உயர்வே டேட்டா திறனோடு சேர்த்து, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் குரோமிங் பலன்களையும் வழங்குகின்றன.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிக்கான தலைமைச் செயல் அலுவலர் திரு. மனோஜ் முரளி,இது குறித்து பேசுகையில்,“தர்பார் திரைப்படத்தோடு இணைந்திருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா திரைப்படங்களோடு எங்களது கடந்தகால ஒத்துழைப்பு உடன்பாடுகளின்போது வாடிக்கை யாளர்களிடமிருந்து பிரமாண்டமான வரவேற்பை நாங்கள் பெற்றிருந்தோம். மிகச்சிறந்த வலையமைப்பையும் மற்றும் உள்ளடக்க அனுபவத்தையும் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான எங்களது செயல்முயற்சியின் ஒரு பகுதியாக தர்பார் திரைப்படத்தின் பிரத்யேக அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் பெரும்உற்சாகம் கொண்டிருக்கிறோம். இந்த சிறப்பான அனுபவத்தை மகிழ்ச்சியோடு அனுபவிக்கவும் மற்றும் சூப்பர்ஸ்டாரின் மற்றுமொரு த்ரில்லர் திரைப்படத்தை கொண்டாடி மகிழவும், ரஜினி ரசிகர்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்,” என்று கூறினார்.

பிரத்யேக தர்பார் திரைப்பட உள்ளடக்கத்தை இலவசமாக கண்டு மகிழவும் மற்றும் தர்பார் திரைப்படம் தொடர்பான க்விஸ் போட்டியில் பங்கேற்கவும் கீழ்க்கண்டவற்றை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் செய்யவேண்டும்.
1. ஏர்டெல் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியின் சமீபத்திய பதிப்பினை தங்களது மொபைல்களில் கொண்டிருக்க வேண்டும் (ஆண்ட்ராய்டு மற்றும் iழுளு ஆகிய இரண்டிற்கும் இது கிடைக்கிறது). புதிய பயனாளிகள், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே இச்செயலியை பயன்படுத்துபவர்கள், தானியக்க செயல்பாடாக நிகழ்நிலைப்படுத்தும் அறிவிப்புகளை பெறுவார்கள்.

2. ஏர்டெல் பயனாளிகள் அல்லாத பிற நபர்கள் ஒரு ஏர்டெல் 4ஜி சிம்மை பெற்று அதனை தங்களது ஸ்மார்ட் போனில் சிம் ஸ்லாட் ஒன்றில் பொருத்தவேண்டும் மற்றும் அதன்பிறகு படிநிலை 1-ஐ பின்பற்ற வேண்டும்.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலி என்பது, ஏர்டெல் டிவி செயலியின், மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். புதுப்பிக்கப்பட்டுள்ள இச்செயலியானது, ஒரு புதிய பயனாளி இடைமுகத்தையும் (இன்டர்ஃபேஸ்), மிகத்திறன் வாய்ந்த உள்ளடக்க கண்டறிதல் மற்றும் பரிந்துரைப்பிற்கான இயந்திரத்தையும் கொண்டிருக்கிறது. நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு வசதியான வழிமுறையை வழங்குகின்ற றறற.யசைவநடஒளவசநயஅ.inஎன்ற இணையதள முகவரியில் லாக்இன் செய்வதன் வழியாகவும், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் உள்ளடக்கத்தை அணுகிப்பெற முடியும்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *