அஜித்தின் புதிய தோற்றம் – சமூக வலைதளங்களில் வைரல்


நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் படத்தை மீண்டும் இயக்குகிறார். படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் சேசிங் காட்சியில் அஜித்திற்கு கை மற்றும் காலில் அடிபட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது ரசிகர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருடைய புதிய தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.