அஜீத் படப்பாடல் யூடியூப்பில் 100மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை !


அஜீத் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் விஸ்வாசம். சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தந்தை-மகள் பாசத்தை மையமாக வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

தற்போது இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று யூடியூப்பில் 100மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

கண்ணான கண்ணே என்ற தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும் பாடல் தான் இந்த சாதனையைப் படைத்துள்ளது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அஜீத்குமாரின் பாடல் புதிய சாதனை படைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.