அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக் – தலைவி படக்குழுவினர் வெளியிட்டனர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தலைவி என்கிற பெயரில் எடுத்து வருகின்றனர். ஏ.எல். விஜய் படத்தை இயக்குகிறார்.

பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தாம் தூம் படத்தில் நடித்து பிரபலமானவர். கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக பரதநாட்டியம் கற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக்கை வெளியிட்டு உள்ளனர். படம் ஆரம்பிக்கும் போதே எம்ஜிஆர் வேடத்திற்கு அரவிந்த் சாமி தான் பொருத்தமாக இருப்பார் என்று படக் குழுவினர் அவரை அணுகியபோது உடனே ஒப்புக்கொண்டார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக்கை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். போஸ்டர் மட்டும் அல்லாது ஒரு சிறிய வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவும் அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக் வைரலாகி வருகிறது

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *