ஜனவரி – 12 ல் பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் பைரவா!

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி, இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமானமுறையில் தயாரித்து வருகிறார்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி – பரதன் இயக்கும் பைரவா படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார்.

இப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

பைரவா திரைப்படத்தின் டீசர் வெற்றிக்கு பின் பைரவா ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் “ பைரவா ட்ரைலர் “ டிசம்பர் 31 ஆம் தேதி இரவு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றது. பைரவா ட்ரைலர் புத்தாண்டு விருந்தாகவும் அமைந்தது என்பது குறிப்பிடதக்கது. இது வரை தமிழ் சினிமாவில் வெளிவந்த ட்ரைலர்கள் படைத்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்து. இளையதளபதி விஜயின் பைரவா ட்ரைலர் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது. டிசம்பர் 31 ஆம் தேதி வெளிவந்த பைரவா ட்ரைலரை இது வரை 5மில்லியன் பேருக்கு மேல் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இளையதளபதி விஜயின் பைரவா திரைப்படத்தை சென்சார் குழுவினர் இன்று பார்த்து , படத்தை பாராட்டி படத்துக்கு “ U “ சான்றிதழ் வழங்கியுள்ளனர். “ U “ சான்றிதழ் பெற்றுள்ள பைரவா பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரி 12 தேதி திரைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *