​மீண்டும் திரைத்துறையில் களமிறங்கும் ​​”ஶ்ரீதேவர் பிக்சர்ஸ்” ​பாரதி அய்யப்பன்!

ஶ்ரீதேவர் பிக்சர்ஸ் பாரதி அய்யப்பன் அனுப்பியுள்ள பத்திரிக்கை செய்தி அப்படியே…

​அன்புடையீர் அனைவருக்கும் ​​ஶ்ரீதேவர் பிக்சர்ஸ் சார்பாக இந்த ​​பாரதி அய்யப்பனின் வணக்கங்கள்.​கடந்த வருடம் மே மாதம் 19ந்தேதி என் தந்தை எங்களை விட்டு பிரிந்தார் ​என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே. அவரது பிரிவு எங்களை மீளாத்துயரில் ஆழ்த்தியது​.​ ​திக்கு தெரியாத காட்டில் மாட்டிக்கொண்டது போன்று ஓர் உணர்வு​. அப்போது முதல் ஆளாக என் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து என்னை அந்த துயரத்தில் இருந்து மீட்டு மீண்டும் நல்வழியை காட்டிய, வாழும் என் தந்தை பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும்குறிய உயர்திரு ஜெ.அன்பழகன் அன்றிலிருந்து இன்று வரை என் உறுதுணையாக இருந்து வருவதற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் என் தந்தை எப்போதும் கூறுவார் ​”​பெரிய படங்களை விட சிறிய படங்களை வாழவைத்தால்தான் இந்த திரையுலகம் பிழைக்கும் என்று​”.​அதேபோல் தனது இறுதிவரை சிறிய படங்கள் வெளிவர உதவி செய்தார்​.​ அதேபோல் நானும்​ ​சிறிய படங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தபோது எனக்கு துணையாக எனது மாமா திரு.சுகுபூப்பாண்டியன் மற்றும் எனது நண்பர்கள் துணையுடன் திரைத்துறையில் கால் பதித்து இருக்கிறோம் . அதன்படி முதலில் கககபோ என்ற படமும் , பிறகு மஞ்சள் என்ற திரைப்படத்தையும் வாங்கியுள்ளோம்​.​இன்னும் நிறைய சிறிய படங்களை பேசிக்கொண்டும் இருக்கின்றோம்​.​அதை மிகச்சிறந்த முறையில் வினியோகஸ்தம் செய்து தரவும் தயாராக உள்ளோம் .

எங்கள் நிறுவனம் முதலில் வெளியிட்டான கககபோ ஆடியோ வெளீயிட்டு விழாவிற்கு என் தந்தைக்கு நிகரான என் வளர்ச்சியில் மகிழக்கூடிய, என்னை என்றும் ஆசிர்வதிக்கும் என் தந்தை உயர்திரு. ஜெ. அன்பழகன் பொற்கரங்கங்களால் வெளியிட வேண்டும்​ ​என்று ஆவல்கொண்டு அழைத்த​ ​போது மனமுவந்து விழாவிற்கு வந்து பாடல் வெளியீட்டில் கலந்து கொண்டு எங்களை ஆசிர்வதித்தோடு , என்றும் எங்களுடன் துணை இருப்பேன் என்று கூறி எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய அப்பா ஜெ. அன்பழகன் அவர்களுக்கு , ஶ்ரீதேவர்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக​ எங்களது ​​”​பாரதி அய்யப்பன்- சுகுபூப்பாண்டியன்​”​​நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இனி வரும் காலங்களில் ஶ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் நல்ல தரமான படங்களை தயாரிக்கவும், சிறந்த சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடவும் தயாராக உள்ளது​.​ இதற்கு என்றும் துணையாக இருக்கும் பத்திரிக்கையாளர் அனைவருக்கும் மிக்க​ ​நன்றி.