விவசாயிகளுக்கு ஒரு மாத வருமானத்தை வழங்கிய ‘கேஃபினோ தி கேம் யார்டு’..!

நண்பர்களுடன் சேர்ந்து சிறப்பான பொழுதுபோக்கு, விளையாட்டுகளுடன் கூடிய உணவகம் அல்லது காபி ஷாப் போகவேண்டும் என்று விரும்பினால், உங்களது தேர்வு நிச்சயம் சாலிகிராமத்தில் உள்ள ‘கேஃபினோ’வாகத் தான் இருக்கமுடியும். சென்னை சாலிகிராமத்தில் ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ என்கிற பொழுதுபோக்கு மையம் கடந்த மாதம் துவங்கப்பட்டது.. இதனை இயக்குநர் மீரா கதிரவன், நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.

அந்த சமயத்தில் நடிகர் அபிசரவணன் விவசாயிகளுக்கான போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று வந்தார். அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் மூலமாக சிறுசிறு உதவிகளையும் செய்து கொடுத்து வந்தார். அதனால் இந்த ‘கேஃபினோ’ திறப்பு விழா நிகழ்விலும் விவசாயிகள் பற்றி பேசிய அபிசரவணன், இந்த ‘கேஃபினோ’வின் ஒரு மாத லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை விவசாயிகளுக்கு அளித்தால் நன்றாக இருக்கும் என ஒரு கோரிக்கையையும் பேச்சுவாக்கில் வைத்துவிட்டு சென்றார்.

ஆனால் ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ உரிமையாளர்களோ அபிசரவணனின் இந்த கோரிக்கையை சீரியஸாகவே எடுத்துக்கொண்டார்கள். இந்த ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ மையம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்தநிலையில் இந்த ஒரு மாதத்தில் வந்த லாபத்தை மட்டுமல்ல, ஒருமாத மொத்த வருமானமான ரூ.58 ஆயிரத்தையும் டில்லியில் போராடிய விவசாயிகளுக்கு வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

நேற்று மாலை இந்த தொகையை விவசாயிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்வில் நடிகர்சங்க தலைவர் நாசர் கலந்துகொண்டு ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ சார்பாக அந்த உதவித்தொகைக்கான காசோலையை டில்லி போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கினார்..

விழாவில் பேசிய அபிசரவணன், “நான் பெரிய நடிகர் எல்லாம் இல்லை.. விவசாயிகள் டெல்லியில் போராடியதை ஒரு வீடியோவில் பார்த்துதான் நானும் டெல்லிக்கு கிளம்பினேன்.. நான் நடிகர்சங்கத்தின் உறுப்பினர் என்பதால் இங்கிருந்து கிளம்பியது முதல் அங்கே நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது நடிகர்சங்க செயலாளர் விஷால் சாரிடம் தெரிவித்தவாறே இருந்தேன். விஷால், பிரகாஷ்ராஜ் சார் அவர்கள் டெல்லி வந்ததும் தான் விவசாயிகளின் போராட்டத்துக்கே மீடியா வெளிச்சம் கிடைத்தது:” என தன்னடக்கத்துடன் கூறினார்.

அடுத்ததாக பேசிய நாசர், “அபிசரவணன் விவசாயிகளுக்கு உதவும் ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டதாலேயே, வரலாற்றில் உனக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.. இது ஒரு நல்ல நிகழ்வு.. பணம் பொருள் கொடுத்து உதவிசெய்ய முடிந்தவர்கள் ஒருபக்கம் செய்யட்டும்.. ஆனால் ஓவ்வொரு கிராமத்திலும் சிறு நகரத்திலும் உள்ள குளம், குட்டைகளை தூர்வாரி, ஏரிகளை சுத்தமாக்கி மழைபெய்யும் சமயங்களில் அவற்றில் நீர் தேங்க அங்கிருக்கும் இளைஞர்களும் தன்னார்வலர்களும் உதவினாலே அது விவசாயிகளுக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.. அவர்களுக்கு தேவையானதும் அவர்களது முக்கிய பிரச்சனையும் நீர் தான்” என பேசினார்..

இந்த நிகழ்வில் நடிகைகள் அதிதி, அதுல்யா, மீரா மிதுன், நடிகர்கள் சௌந்தர்ராஜா, ஹரீஷ், நாசரின் மகன் லுத்புதீன், இசையமைப்பாளர் சாம் டி.ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு உதவும் விதமான இதுபோன்ற விஷயங்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்கள். விழாவில் கலந்துகொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் நாசருக்கும் நடிகர்சங்கத்திற்கும் இந்த தொகையை வழங்கிய கேபினோ மையத்திற்கும் இதற்கான முயற்சியை செய்த அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள்.

CAFINO – The Game Yard
1st Floor, No.41, Anna Street,(Backside of Prasad Lab),
Rattinammal Colony,
Saligramam
Chennai.