சூர்யாவின் ‘காப்பான்’ படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி – செப்.20ம் தேதி ரிலீஸ்

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா மற்றும் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் கதை தன்னுடையது என ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இன்று விசாரனைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் காப்பான் திரைப்படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 20ம் வெளியாகும் என இயக்குநர் கே.வி.ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.