கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் ‘தோனி கபடி குழு’ !

திரைப்படம் மற்றும் விளையாட்டு போட்டிகளை கண்டுகளிக்கும் போது தான் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகிறார்கள்.பல திரைப்படங்கள் தமிழில் விளையாட்டை மையமாக வைத்து வந்துள்ளது. அதில் தற்போது “தோனி கபடி குழு” இணைந்துள்ளது. “மைடியர் பூதம்” தொடரில் நடித்த “அபிலாஷ்” இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கனவே “நாகேஷ் திரையரங்கம்” படத்தில் வில்லனாக நடித்துள்ளார். “தோனி கபடி குழு” என்ற தலைப்பே கதையை உணர்த்துகிறது.நல்ல கதை தான் எப்போதும் கதாநாயகன்.அதன்படி இப்படத்தின் கதை கபடி மற்றும் கிரிக்கெட் என்று இரண்டு கதாநாயகர்களின் இடையே நடைபெறுகிறது என்றார் நாயகன் அபிலாஷ். என்னை தவிர்த்து படத்தில் 8-கதாபாத்திரங்கள் உள்ளன.இயக்குனர் A.வெங்கடேஷின் துனை இயக்குனரான P.ஐயப்பன் இப்படத்தை இயக்குகிறார்.

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது; இக்கதை முழுவதும் கற்பனையானது.அதில் என்னுடைய வாழ்க்கையையும் நான் சேர்த்துள்ளேன்.நான் சிறு வயதிலிருந்து கபடி விளையாடி தான் வளர்ந்தேன்.நான் பள்ளியில் கபடி சாம்பியன்.அப்போது என்னுடைய நண்பர்கள் கிரிகெட் விளையாடும் போது எனக்கு பிடிக்காது.அதன் பிறகு கிரிக்கெட் என்னை மிகவும் ஈர்த்தது.தோனி கபடி குழுவில் சமூக கருத்தும் உள்ளது என்றார் இயக்குனர். நடிகர்களை தாண்டி படத்தில் நிஜ வாழ்கை கபடி விளையாட்டு வீரர்கள் சிலர் நடிக்கிறார்கள். “பட்டம் போலே” படத்தில் துல்கருடன் நடித்த லீமா இப்படத்தில் நடிக்கிறார்.

மேலும் படத்தில் தெனாலி,சரண்யா,செந்தில்,புகழ்,விஜித்,C.N.பிரபாகரன்,ரிஷி,நவீன் சங்கர்,சுஜின்,பீட்டர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கதை,திரைக்கதை மற்றும் வசனத்தை ஐயப்பன் எழுதியுள்ளார். இசை:- ரோஷன் ஜோசப்,பின்னனி இசை மகேந்திரன்,பாடல்கள்:- ராசா,ஒளிப்பதிவு:- வெங்கடேஷ் DF.Tech,படத்தொகுப்பு:- கார்த்திகேயன், கலை A.C சேகர்,உடைகள் K.மனோகரன்.இப்படத்தின் படபிடிப்பு விழுப்புரம்,கல்லகுறுச்சி ஆகிய பகுதிகளில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.படம் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2018 அன்று வெளியாகவுள்ளது. நந்தகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். வருகிற 7ம் தேதி இந்தியன் கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்த நாளன்று இதன் டைட்டில் லோகோ வெளியீடுகிறார்கள் .

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *