வதந்தியை பரப்ப வேண்டாம் – நடிகை நஸ்ரியா

அஜித்தின் அடுத்த படம் “வலிமை”. இயக்குநர் வினோத் இயக்கும் இப்படத்தில் அஜித்திற்கு நடிகை நஸ்ரியா ஜோடியாக நடிப்பதாக சமீபத்தில் வதந்தி பரவியது. இதற்கு காரணம் நடிகை நஸ்ரியா சமீபத்தில் டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் வலிமை என்ற சொல்லை பயன்படுத்தி இருந்ததார். அதனால் அவர்தான் வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று தகவல் பரவியது. ஆனால் இதை நடிகை நஸ்ரியா மறுத்துள்ளார்.

வலிமை படத்தில், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நான் நடிக்க இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் உண்மை இல்லை. இன்னும், எதுவுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனவே, தற்போதைய நிலையில், இந்த வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம் என கூறியிருக்கிறார்.

இருந்த போதிலும் நஸ்ரியாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் அஜித்-வினோத் கூட்டணியில் படம் உருவாக உள்ளதால் ”வலிமை” திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.