தளபதி 64 படப்பிடிப்பில் விஜய்யை காண குவியும் ரசிகர்கள்!


பிகில் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குகிறார்.

தளபதி 64 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டில்லி உள்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இதனால் சூட்டிங்கிற்காக வரும் விஜய்யைக் காண சிறைச்சாலை முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்து விடுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் விஜய் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலின் முன்பும் விஜய்யைக் காண ரசிகர்கள் குவிகின்றனர்.

விஜய் ரசிகர்களைப் பார்த்து கை அசைப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது.