கர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு-தனுஷ் டுவிட்!


தனுஷ் தற்போது கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தனுஷிற்கு 41வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் படத்தின் தற்போதைய அப்டேட் குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

கர்ணன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. மேலும் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *