சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம் அடுத்து ‘ஹர ஹர மகாதேவகி’!

ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் , ஹரி இயக்கத்தில் ‘சி 3’ ( S3) படபிடிப்பு முடிவடைந்து டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதையடுத்து சூர்யா நடிக்கும் , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படபிடிப்பு இம்மாதம் ஆரம்பமாகிறது.

மேலும் இவர் வெளியிடும் உரிமை பெற்ற படமாக புதிய படத்தின் பூஜை இன்று ( 06.11.16) நடந்தது. இப்படத்திற்கு ‘ஹர ஹர மகாதேவகி’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை , கதை , திரைக்கதை , அமைத்து வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார். இவர் “எங்கேயும் எப்போதும்” டைரக்டர் சரவணின் உதவி இயக்குநர் ஆவார்.

இப்படத்துக்கு இசை பால : முரளி பாலு , ஒளிப்பதிவு : செல்வ குமார் , கலை : சுரேஷ் ( அறிமுகம் ) இவர் கலை இயக்குநர் ராமலிங்கத்தின் உதவியாளர். “ ஸ்லாப் ஸ்டிக் “ ( SlapStick ) காமெடியாக உருவாகும் இப்படத்தின் படபிடிப்பு வருகிற 23தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் நடைபெறும் இப்படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ். தங்கராஜ் தயாரிக்கிறார்.