சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் நடிக்கும் வாய்பை இழந்தேன் – பிரபல தெலுங்கு நடிகர் வருத்தம்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலிஸ் அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் “தர்பார்”.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு வெளியான “சும்மா கிழி” என்ற ஓப்பனிங் சாங் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

தர்பார் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் தர்பார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து பிரபல தெலுங்கு நடிகர் ரக்ஷித் ஷெட்டி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் தர்பார் படத்தில் நடிக்க இயலவில்லை என்று அவர் கூறியுள்ளார்.