ஹாலிவுட் பாணியில் தயாராகியிருக்கும் திகில் திரைப்படம் ‘ஜெஸி’

சாய்ராஜ் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக பி.பீ.எஸ். ஈசா குகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஜெஸி’. கின்னஸ் சாதனைப் படம் ‘அகடம்’ மற்றும் ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் இசாக்கின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு.

இது ஹாலிவுட் பாணியில் தயாராகியிருக்கும் திகில் திரைப்படம் .இதில் நகைச்சுவை கலக்கவில்லை .பேய்கள் மீது நம்பிக்கையில்லாத ஒரு திரைப்பட இயக்குனர் ,பேய் படம் எடுக்க திட்டமிடுகிறார் .இதற்காக ஒரு தனிமையான பங்களாவில் குடியேறுகிறார் .அந்த பங்களாவில் ஏதோ ஒரு அமானுஷ்யம் உள்ளதால் டைரக்டர் பேனாவை திறந்து எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் அவரை எழுத விடாமல் தடுக்கிறது .அவர் கதையை எழுதினாரா ?இல்லையா ? என்பது மீதி கதை .

அறிமுக நாயகன் ஜெமினி நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீபிரியங்கா, லட்சுமி கிரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் நெளஷாத் ஒளிப்பதிவில், எஸ்.தேவராஜ் படத்தொகுப்பில், பூங்கா கிருஷ்ணமூர்த்தி கலை வடிவில் மற்றும் சஜித் ஆண்டர்சன் ராஜ் இசையில் மிக திகிலாக உருவாகியிருக்கிறது. மேலும் ஹாலிவுட் தர படத்திற்கு இணையாக திரைக்கதை அமைக்கப்பட்டு ஒரு வித்தியாசமான கதை களத்தோடு உருவாகியுள்ளது. பயத்தின் தன்மை நீங்கா வண்ணம் சில காட்சிகள் ‘லோ லைட் கேப்ச்சர் மெத்தெட்’ -இல் எடுக்கப்பட்டுள்ளது.

இரவு பகல் பாராமல் ரசிகர்களை புது விதமாக திகிலூட்ட, சில சிறப்பு அம்சங்களை நுணுக்கமாக இயக்குநர் கையாண்டுள்ளார். நம் நாட்டில் நடக்கும் தடுக்க முடியாத கிரைம்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக விரைவில் திரைக்கு வருகின்றது. இத்திரைப்படத்தில் பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொழிற்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து -இயக்கம் : இசாக், ஒளிப்பதிவு : நெளஷாத், இசை : சஜித் ஆண்டர்சன் ராஜ்,படத்தொகுப்பு : எஸ்.தேவராஜ், கலை : பூங்கா கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு : செல்வரகு , தயாரிப்பாளர் : பி.பீ.எஸ். ஈசா குகா.