சூப்பர்ஸ்டாரின் புதிய படத்தை தயாரிக்கிறாரா கமல்?


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி அனிருத் இசையமைத்துள்ள தர்பார் படத்தின் ஓப்பனிங் சாங் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கைதி படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டினார். அதற்கு நன்றி தெரிவிக்க லோகேஷ் கனகராஜ் சூப்பர்ஸ்டாரின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் சென்றார். அப்போதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

தற்போது அந்தப்படத்தை கமலின் ராஜ் கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. நாளை மறுநாள் நடைபெற உள்ள தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *