மருத்துமனையில் இருந்து வீடு திரும்பிய லதா மங்கேஷ்கர்.


பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் உடல் நலம் சரியானதைத் தொடர்ந்து நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இது குறித்து லதா மங்கேஷ்கர் கூறியதாவது

“நான் கடந்த 28 நாட்களாக பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தேன். எனக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. டாக்டர்கள் முழுமையாக குணமடைந்தவுடன் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். தற்போது கடவுளின் ஆசீர்வாதங்களுடன் வீடு திரும்பி உள்ளேன்.

நான் குணம் அடைய வேண்டிய எல்லா நலம் விரும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் பலன் அளித்துள்ளன. உங்கள் ஒவ்வொருவரையும் தாழ்மையுடன் தலை வணங்குகிறேன்.”

இவ்வாறு லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *