உதயநிதி – சமுத்திரக்கனி மோதலில் உருவாகியிருக்கும் ‘நிமிர்’ திரைப்படம்!

போட்டோகிராபராக இருக்கும் ஒரு கிராமிய இளைஞனின் வாழ்க்கையும் பழிவாங்கும் படலமும் தான் ‘நிமிர்’. இது ஒரு சராசரி த்ரில்லர் படம் கிடையாது. இயக்குனர் ப்ரியதர்ஷன் தனக்கே உரிய பாணியில் இப்படத்தை செதுக்கியுள்ளார். இது ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படம்.

உதயநிதி ஸ்டாலினின் கதாபாத்திரத்தின் பெயர் ‘மகேஷ்’. தன் சுய பலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழிவாங்கும் கதாபாத்திரம் அவருடையது.

M S பாஸ்கர், மகேந்திரன் மற்றும் சமுத்திரக்கனியின் நடிப்பும் பெரிதளவு பேசப்படும். கதாநாயகி நமீதா பிரமோத் சிறந்த நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். பார்வதி நாயர் தனது கதாபாத்திரத்தில் ஜொலித்துள்ளார். தென்காசியில் நடக்கும் இக்கதையில், ஒரு சராசரி கிராமத்து இளஞ்சனின் வாழ்க்கையை எல்லோரும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும்படி படமாக்கப்பட்டுள்ளது. கிராமத்தையும் , கிராமத்து வாழ்க்கையும், அதன் உணர்வுகள் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் அழகாக படமாக்கியுள்ளார். சினிமா ரசிகர்களை ‘நிமிர்’ நிச்சயம் சந்தோஷப்படுத்தி ரசிக்கவைக்கும்.

‘நிமிர்’ குறித்து இயக்குனர் ப்ரியதர்ஷன் பேசுகையில் , ” இது எனக்கு ஒரு ஸ்பெஷல் படமாகும். இவ்வளவு ஆண்டு காலம் திரை துறையில் இருந்தாலும் இயக்குனர் மகேந்திரனுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை. முதலில் அவருக்கு உதவி இயக்குனராக இருக்க ஆசைப்பட்டேன். அது நடக்காமல் போனது. பிறகு பலகாலம் கழித்து இந்த படத்தில் தான் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. உதயநிதியின் கதாபாத்திரத்தின் வளர்ச்சிக்கு மகேந்திரன் அவர்களின் கதாபாத்திரம் மிக முக்கியமானதாகும். மகேந்திரன் சார் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமாக கருதுகிறோம். அவருக்கு இந்த படத்தின் கதையை கூறியபொழுது அவர் பரிந்துரைத்த தலைப்பு தான் ‘நிமிர்’. இதை விட பொருத்தமான தலைப்பு இக்கதைக்கு கிடைக்காது. சமுத்திரக்கனியின் நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் அது பத்தாது. அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் அர்ப்பணிப்பும் நடிப்பும் இந்த கதைக்கு அவ்வளவு அழகாக பொருந்தியிருந்தது. இப்படத்தில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும். கதாபாத்திரமாகவே மாறி அசத்தியுள்ளார் . எனது எதிர்பார்ப்பை முழுவதும் நிறைவேற்றியுள்ளார். கதாநாயகி நமீதா பிரமோத் அருமையாக நடித்துள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பில் அபாரமான முன்னேற்றத்தை கண்டேன். சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார். ரசிகர்கள் நிச்சயம் அவரது கதாபாத்திரத்தை ரசிப்பார்கள். ‘நிமிர்’ படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்”

”நிமிர்” குறித்து நமீதா பிரமோத் பேசுகையில், ” ப்ரியதர்ஷன் சார் போன்ற ஒரு ஜாம்பவானோடு பணிபுரிந்ததை பாக்கியமாக கருதுகிறேன். உதயநிதி ஸ்டாலின் சாருடன் பணிபுரிந்து ஒரு மறக்க முடியாத, அருமையான அனுபவம். அவரது எளிமையை கண்டு வியந்தேன். எனது கதாபாத்திரம் அவ்வளவு அழகாக வடிவமைத்துள்ளார் ப்ரியதர்ஷன் சார். திரையில் என்னை இவ்வளவு அழகாக நான் இதுவரை பார்த்ததில்லை. படப்பிடிப்பை முடித்துவிட்டோம். ரசிகர்கள் ‘நிமிர்’ படத்தை கண்டு மகிழும் நாளை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன் ” என்றார்.

தயாரிப்பாளர் : சந்தோஷ் T குருவில்லா
இயக்குனர்: ப்ரியதர்ஷன்
ஒளிப்பதிவு : N K ஏகாம்பரம்
படத்தொகுப்பு : நாயர் M S
கதை : சுயாம் புஸ்கரன்
வசனம் : சமுத்திரக்கனி
இசை : தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத்
கலை :மோகன்தாஸ்
நிர்வாக தயாரிப்பாளர் : சந்தீப் நாராயண்
தலைமை தயாரிப்பு நிர்வாகி : அரோமா மோகன்
துணை இயக்குனர் : அர்ஜுன் பாலகிருஷ்ணன்
இணை இயக்குனர் : ரவி தியாகராஜன்
நடிகர்கள் : உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, M S பாஸ்கர், மஹேந்திரன், ஷண்முகராஜ்

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *