அனைத்து வசதிகள், கூடுதல் இருக்கைகளுடன் பிரசாத் லேப் தியேட்டர்…!

‘பிரசாத் லேப்’பிற்கு கல்யாணம் அவர்கள் நிர்வாகியாக பொறுப்பேற்றயுடன் பிரசாத் தியேட்டரை புதுப்பித்தார்.. அவருடனான நமது பேட்டி..

தமிழ் திரையுலகில் பழம் பெருமை மிக்க ‘பிரசாத் லேப்’ நிறுவனத்தின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது ‘பிரசாத் ப்ரிவியூ தியேட்டர்’. 128 இருக்கைகள் மட்டுமே இருந்த ப்ரிவியூ தியேட்டர் நிர்வாகியாக நான் பொறுப்பேற்ற பின் நிர்வாகத்தினரிடம் கூறி தியேட்டர் நவீனமயமாக்கப்பட்டது.

தியேட்டரில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டு வணிக ரீதியாக நடத்தப்பட்டு வரும் தியேட்டர்களில் உள்ள நவீனமான 190 குஷன் இருக்கைகள் பொருத்தப்பட்டு முன்னை காட்டிலும் அதிகம் பேர் படம் பார்க்கும் வண்ணம் தியேட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் இருக்கைகள் போடும் வசதியும் உள்ளது. கூடுதல் இருக்கைகளுடன் மொத்தம் 230 பேர் லேப் தியேட்டரில் அமர முடியும்.

திரைப்படங்களை பளிச்சென்றும், துல்லியமாகவும் பார்வையாளர்கள் பார்த்து பரவச நிலை அடையும் வண்ணம் பழையஸ் கீரின் அகற்றப்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்புடைய சில்வர் ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது.

ஒலி ஒளி அமைப்பு துல்லியமாக இருக்கும் வகையில் 45லட்ச ரூபாய் செலவில் 4 K தொழில் நுட்பம் மேல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொருத்தப்பட்டுள்ள முதல் ப்ரிவியூ தியேட்டர் ப்ரசாத் ப்ரிவியூ தியேட்டர் மட்டுமே.

அதுமட்டுமல்ல, கூடுதலாக பார்வையாளர்கள் வரும்பட்சத்தில், அருகிலேயே உள்ள 70 எம்எம் அரங்கிலும் அமர வைக்க தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திரையரங்கம் ஆசியாவிலேயே முதல் பெரிய 70 எம்எம் திரை கொண்ட நவீன அரங்காகும். இங்கு 80 பேர் வரை அமர்ந்து படம் பார்க்கலாம்.

விஐபிகள் – செய்தியாளர்கள் சந்தித்துப் பேச நவீன குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெரிய அறையும் லேப் தியேட்டரிலேயே உள்ளது.

இந்த அரங்குகளில் கழிப்பறைகள் நவீனமயமாக்கம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

250இருக்கர வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதி கொண்ட ஒரே ப்ரிவியூ தியேட்டர் சென்னையில் “ப்ரசாத் ப்ரிவியூ தியேட்டர் ” மட்டுமே என்பதை திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவரும் நன்கறிவார்கள். அதை மீண்டும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!