பாலு மகேந்திராவின் உதவியாளர் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’

ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி .ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ‘ புயலாய் கிளம்பி வர்றோம் ‘. இது மதுரை மண் சார்ந்த கதை. படித்து விட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் கோழைகள் அல்ல .அவர்களைச் சீண்டி விட்டால் தாங்க முடியாது என்று சொல்கிற கதை .

நாயகனாக தமன் , நாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளனர். தவிர இயக்குநர் ஆர்.என்.ஆர். மனோகர் , சிங்கம்புலி , திருமுருகன் , அழகன் தமிழ்மணி , ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ள ஜி.ஆறுமுகம் பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சில குறும்படங்கள் இயக்கிய அனுபவமும் கொண்டவர்.

இயக்குநரிடம் படம் பற்றிக் கேட்ட போது ,

” இது படித்த இளைஞர்களின் கோபத்தின் முன் எப்படிப் பட்ட பலசாலியும் வீழ்ந்து விடுவான் என்று சொல்கிற கதை.

இது மதுரைப் பகுதியில் நடக்கும் கதை என்றாலும் மதுரை , சென்னை, கொடைக்கானல் , பாண்டிச்சேரி போன்ற பல ஊர்களில் படப்பிடிப்பு நடந் துள்ளது. பல நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம்.
31 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தோம்.” என்றவர் தயாரிப்பாளரை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.
” தயாரிப்பாளருக்கு இதுதான் முதல் படம். நானும் அறிமுக இயக்குநர் தான் . இருந்தாலும் , எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு ஒரு நாளும் அவர் வந்ததில்லை. படத்தில் வேலை பார்த்தவர்களுக்கே நான் தான் தினமும் பணப்பட்டுவாடா செய்தேன் . அந்த அளவுக்கு என்னிடம் நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்தவர் அவர் . ” என்கிறார் .

இப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் விஜய்.வி. , இசையமைத்திருப்பவர் சார்லஸ் தனா இருவருக்கும் இதுவே முதல் படம் . எடிட்டிங் – எஸ்.சதிஷ் குமார் , வசனம் _ கே.நந்தகுமார் ,கலை இயக்கம் – முத்துவேல் , நடனம் -பாலாஜி ,தினா , ராதிகா. ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ் , தயாரிப்பு நிர்வாகம் -ஒய்.எஸ்.டி. சேகர்.படத்துக்குத் தணிக்கை முடிந்து யூ சான்றிதழ் கிடைத்து இருக்கிறது.

‘புயலாய் கிளம்பி வர்றோம்’ படம் ஜூலை 28-ல் வெளியாகிறது.