தாதா கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தானம்?


தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த சந்தானம் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஏ ஒன் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்தன. விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.

சந்தானம் படங்களின் வசூலில் சாதனையாக அமைந்தது. சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன் வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது.

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார். தற்போது இந்தக் கூட்டணியில் ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் இணைந்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் தாதா வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.