மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

விஜய் நடிக்கும் 64 ஆவது திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்பட்டது. இதில் விஜய் சேதுபதியின் லுக் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இந்த போஸ்டரிலும் விஜயின் லுக் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாஸ்டர் திரைப்படம் கோடைவிடுமுறையில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.