விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு

பிகில் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் விஜய்யின் லுக் மட்டும் இருந்தது.

இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பொங்கலை முன்னிட்டு நாளை மாலை வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

நாளை வெளியாக உள்ள மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதியின் லுக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.