சீமராஜா எனக்கு நல்ல உள்ளங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பை அளித்தது – நடிகை சிம்ரன்!

காலங்கள் கடந்தாலும் ஒரு சிலரே ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார்கள். அந்த வகையில் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத, மகாராணியாக தனி இடத்தை பிடித்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகைகள் வந்து போயிருக்கிறார்கள், ஆனால் இன்றைக்கும் தனக்கென தீவிர ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு நாயகி என்றால் அது சிம்ரன் தான்.

தனது படைப்புகள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை பெற்று மிகப்பெரிய உயரத்தை அடைந்த சிம்ரன், நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று யாராவது நினைத்திருப்போமா?. சீமராஜா படத்தில் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பொன்ராம் சார் என்னை அணுகிய போது எனக்கும் அந்த மனநிலை தான் இருந்தது. நான் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொளள உண்மையிலேயே தயங்கினேன். ஆனால் கதையை என்னிடம் சொல்ல எனக்காக பொன்ராம் சார் பொறுமையாக காத்திருந்ததால் தான் இது நடந்தது. ஒருமுறை, நான் கதையை கேட்ட பிறகு, என் கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்த்த பிறகு இந்த படத்தில் நடிக்கும் தீர்மானத்துக்கு வந்தேன்.

இந்த படத்தில் எனக்கு நல்ல உள்ளங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒரு குடும்பமாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தனர். கடந்த பல ஆண்டுகளில் பல படங்களில் பணிபுரிந்திருந்தாலும், இந்த குழுவில் முழுக்க நேர்மறை அதிர்வுகளை உணர்ந்தேன். குறிப்பாக, சிவா, பொன்ராம் கூட்டணி ஏற்கனவே வெற்றிகரமான படங்களை கொடுத்துள்ளது, ரசிகர்கள் எந்த கேள்வியும் இல்லாமல் இந்த படத்தை பார்க்க வருவார்கள். ஆனால் சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் குழுவில் உள்ள அனைவருமே ரசிகர்களுக்கு முந்தைய படத்தை விடவும் சிறப்பான படத்தை கொடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள்” என்றார்.

24AM ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி வரும் இந்த சீமராஜா, உலகமெங்கும் செப்டம்பர் 13ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது. எற்கனவே டி இமான் இசையமைத்திருக்கும் பாடல்கள் அனைத்து வானொலி நிலையங்களிலும் தொடர்ச்சியாக ஒலித்து கொண்டிருக்கின்றன. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவும், மிகுந்த நேர்த்தியான பொழுதுபோக்கு படத்துக்கான காட்சியமைப்புகளும், டிரெய்லரில் வந்த இறுதி சில நொடிகளும் படத்தின் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *