இணையதளத்தின் மூலம் திரைப்படத்திற்கான இசையை பெறலாம்!

இணையதளத்தின் மூலம் உலகத் தர இசை
REGISTER … LOGIN… LISTEN… BUY CREDITS… DOWNLOAD MUSIC.

வியக்க வைக்கும் அறிவியல் வளர்ச்சியின் விளைவாக அனைத்துத் துறைகளிலும் இணையத்தின் பங்களிப்பு விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதன் வீச்சு இப்போது திரைப்படத் துறை இசையிலும் செயல்பட தொடங்கியிருக்கிறது.

ஒரு திரைப்படத்தின் பாடல்களுக்கான இசையையும், பின்னணி இசையையும் இணைய தளத்திலேயே நம்மால் பெற முடியும் என்பதைக் கேட்பதற்கு உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறதா?

இத்தகைய பெருமைக்குரிய சாதனையை 50 வருட வரலாறு கொண்ட ஜெர்மனியிலிருக்கும் புகழ் பெற்ற இசை உருவாக்க நிறுவனமான ‘SONOTON’ செய்து கொண்டிருக்கிறது. உலகத்தின் பல நாடுகளில் உருவாகும் திரைப்படங்களில் இந்நிறுவனத்தில் உருவாகும் இசை பயன்படுத்தப்படுகிறது. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்ற திரைப்படங்களில் இந்நிறுவனத்தின் இசை இடம் பெற்றிருக்கிறது. சமீபத்தில் அகாடெமி (ஆஸ்கர்) விருது பெற்ற ‘Manchester by the Sea’ திரைப்படத்தில் கூட இந்நிறுவனத்தின் இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஹாலிவுட்டின் Universal Pictures, 20th Century Fox, Warner Bros, Sony Pictures, Columbia pictures ஆகிய புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் ‘SONOTON’ இசை நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.

இந்நிறுவனம் தன் இசையை இந்திய படவுலகினரும் பயன்படுத்தும் வகையில் செயல் வடிவில் இறங்கியிருக்கிறது. அதற்கான அதிகார பூர்வ இந்திய காப்புரிமை சென்னையிலிருக்கும் திரு.லேகா ரத்னகுமாரின், லேகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

திரைப்படம், விளம்பரப் படங்கள், மாணவர்களின் பயிற்சி படங்கள், ஆவணப் படங்கள், செய்தி ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கு இசை தேவைப்படுவோர் சோனட்டானின் www.sonofind.com என்ற இணையதளத்திற்குச் சென்றால், அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 2500 இசையமைப்பாளர்களின் 2,00,000 க்கும் மேற்பட்ட இசைக் கோர்வைகள் இந்த இணையதளத்தில் இருக்கின்றன. அந்த பலவகை இசைக் கோர்வைகளையும் கேட்டு, தங்களுக்கு அவற்றில் எது வேண்டும் என்று தீர்மானித்து, அதற்குரிய கட்டணத்தை இணையதளத்தில் செலுத்தி, இணையதளத்தின் மூலமே அவற்றைப் பெற்று தங்களின் படைப்புகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு SONOTON நிறுவனத்தின் இந்த www.sonofind.com இணையதளம் ஒரு வரம் என்றே கூறலாம்.

உலகத் தரம் கொண்ட அற்புத இசை கோர்வைகளை தங்களின் படைப்புகளில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் இசையமைப்பாளர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் உடனடியாக www.sonofind.com இணையதளத்திற்குச் செல்லுங்கள். அதில் இருக்கும் உயர்ந்த இசையை உங்களின் படைப்புகளில் பயன்படுத்தி அவற்றை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லுங்கள்.

உங்களின் கைகளில் இருக்கும் android app மற்றும் apple app அலைபேசியிலேயே Sonofind app -ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உலக இசையை இந்தியாவில் பரப்பும் காப்புரிமையைப் பெற்றிருக்கும் லேகா ரத்னகுமார், தன் லேகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்திய இசையை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் மிகப் பெரிய பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். இந்திய இசைக் கலைஞர்களை வைத்து அவர் சமீபத்தில் உருவாக்கியிருக்கும் 11 இசை ஆல்பங்கள் ‘SONOTON’ நிறுவனத்தின் மூலம் உலகமெங்கும் தயாராகும் திரைப்படங்களில் இடம் பெறப் போகின்றன என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே!