விஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியீடு


சீனியர் சினிமா பத்திரிகையாளர் நெல்லை பாரதி தொகுத்துள்ள ‘மாண்புமிகு மக்கள் செல்வன்’ என்கிற விஜய் சேதுபதி பிறந்த நாள் சிறப்பு மலரை, அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய விருது பெற்ற இயக்குநரும் விஜய் சேதுபதியை ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகராக அறிமுகம் செய்தவருமான சீனு ராமசாமி வெளியிட , சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.ஆர்.பாலேஷ்வர் பெற்றுக்கொண்டார்.

தன் உடல்நிலை முடியாத நிலையிலும் சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினரும் சீனியர் பத்திரிகையாளருமான திரு.நெல்லை பாரதி அவர்கள். நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மாண்புமிகு மக்கள் செல்வன்’ எனும் சிறப்பு மலரை வெகுசிறப்பாக கொண்டு வந்துள்ளார்.

சினிமா பத்திரிகையாளர் சங்க செயலாளர் ஆர். எஸ் கார்த்திகேயன், பொருளாளர் மதிஒளி குமார் உள்ளிட்ட சினிமா பத்திரிகையாளர்கள் உடன் உள்ளனர்.