வெப் தொடரில் தமன்னா நடிக்கிறாரா !?


நாடகம், கருப்பு-வெள்ளை திரைப்படங்கள், வண்ண திரைப்படங்கள், அனிமேஷன் திரைப்படங்கள் என்று சினிமா பல்வேறு பரிமாணங்களைக் கடந்து வந்துள்ளது.

தற்போது வெப் தொடர்கள் மக்களிடையே பிரபலாமாகி வருகிறது. இதில் நடிப்பதற்கு பல்வேறு நடிகர் நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாலிவுட்டில் ஏற்கனவே பல வெப் தொடர்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வெப் தொடர் காய்ச்சல் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளிடையேயும் வேகமாக பரவி வருகிறது.

அந்த வகையில் பிரசன்னா, பாபி சின்ஹா, காஜல் அகர்வால், சமந்தா, பிரியாமணி, நித்யாமேனன், நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் வெப் தொடர்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை தமன்னா, அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *