பாலாவின் “தாரைதப்பட்டை” படபிடிப்பு முடிந்தது!

இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் “தாரை தப்பட்டை” படத்தை சசிகுமார் தயாரித்து நாயகனாக நடிக்கிறார். மேலும் நாயகியாக வரலக்ஷ்மி சரத்குமாரும் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து தஞ்சாவூரிலும் மற்றும் அதன் சுற்றுபுர இடங்களிலும் நடைபெற்று வந்தது.

தற்போது இப்படத்தின் படபிடிப்பு முழுவதுமாக முடிந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 130 நாட்களில் இப்படத்தின் படபிடிப்பை முடித்துள்ளார் இயக்குனர் பாலா.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 1000மாவது படம் தாரை தப்பட்டை என்பது குறிப்பிடதக்கது.