தளபதி 64 படப்பிடிப்பு தொடங்கியது


தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த செந்தூரப்பாண்டி, தேவா , ரசிகன் ஆகிய 3 படங்களை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். தற்போது நான்காவது முறையாக XB பிலிம் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தளபதி விஜயின் 64 வது படத்தை தயாரிக்கிறார் . இந்தப் படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இசையமைப்பாளர் அனிருத் கத்தி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தளபதி விஜயுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை கவனிக்கிறார் .

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார் .

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. சம்மர் 2020 இல் திரைக்கு வரவிருக்கிறது .

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *