ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்கும் “தனி ஒருவன்”

நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை வித்தியாசமான கோணத்தில் புதுவிதமான திருப்பங்களை கொண்ட கதை அம்சத்துடன் தயாராகி இருக்கும் படமே “தனி ஒருவன்”.

ஜெயம், சந்தோஷ் சுப்புரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய மோகன் ராஜா தனது கனவு படமாக “தனி ஒருவன்” படத்தை இயக்கியுள்ளார். வெற்றிக்கூட்டணியான மோகன் ராஜா – ஜெயம் ரவி இணையும் ஆறாவது படம் இது.

ஜெயம் ரவி கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடிக்க அரவிந்த் சாமி இதுவரை நடித்திராத முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யாரும் நடித்திராத ஒரு புது கதாபாத்திரத்தில் தம்பி ராமைய்யா நடிக்க, உடன் கணேஷ் வெங்கட்ராமன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேற்கிந்திய இசையில் புதிய பரிமானத்தை அளிக்கும் ஹிப் ஹாப் தமிழா புகழ் ஆதி இப்படத்திற்க்கு இசை அமைத்துள்ளார். பொதுவாக துள்ளல் இசைக்கு மட்டும் பயன்படுத்தபட்ட ராப் இசையை, நல்ல கருத்துக்கள் கொண்ட வரிகளுக்கு உணர்ச்சிகளை உத்வேகம் படுத்தும் வகையில் ஹிப் ஹாப் இசையை கையாண்டுள்ளார். இசை பிரியர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.

இப்படத்தின் இன்னொரு தனியம்சம் யாதெனில், இப்படத்திற்கு ஒளிப்பதிவை செய்த ராம்ஜி, படத்தின் கதையை கேட்டவுடன், இப்படத்தை ஃபிலிம் தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கூற ஃபிலிம் தொழில்நுட்பத்திலேயே படமாக்கப்பட்ட்து.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட சார்பாக கல்பாத்தி S அகோரம், கல்பாத்தி S கணேஷ், கல்பாத்தி S சுரேஷ் தயாரித்துள்ளார்.

படத்தொகுப்பை கோபி கிருஷ்ணாவும், கலை இயக்கத்தை வி. செல்வகுமாரும் மேற்கொண்டுள்ளனர்.

டெஹரடூன், மசூரி, கோவா, பேங்காக் போன்ற பகுதிகளில் படமாக்க பட்ட தனி ஒருவன், தற்போது படபிடிப்பு முழுவதும் முடிந்து இறுதிகட்ட மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வெகு சிறப்பாக வந்திருக்கும் “தனி ஒருவன்” படத்தின் இசை, இப்படத்தின் வெற்றியை மேலும் உறுதியடைய செய்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இயக்குனர் மோகன் ராஜா.

இப்படத்தின் இசை ஜுலை 15ம் தேதியும், படம் ஆகஸ்ட் மாதமும் வெளியீட திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

கதை, திரைக்கதை வசனம் – மோகன் ராஜா

வசனம் – சுபா மற்றும் மோகன் ராஜா

இசை – ஹிப் ஹாப் தமிழா ஆதி

ஒளிப்பதிவு – ராம்ஜி

படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா

கலை – வி. செல்வகுமார்

நடனம் – பிருந்தா

சண்டைப்பயிற்சி – ஸ்டண்ட் சில்வா மற்றும் திலிப் சுப்பராயன்

மக்கள் தொடர்பு – நிகில்

தயாரிப்பு நிர்வாகம் – S மாரியப்பன்

நிர்வாக தயாரிப்பு – SM வெங்கட் மாணிக்கம்

தயாரிப்பு – கல்பாத்தி S அகோரம், கல்பாத்தி S கணேஷ், கல்பாத்தி S சுரேஷ்