ஹாலிவுட் தர ஆக்‌ஷனுடன் களம் இறங்கும் ‘துப்பறிவாளன்’!

பொதுவாக ஒரு படத்துக்கு அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை வெளியிடும் விழா தான் நடத்துவார்கள். ஆனால் துப்பறிவாளன் படத்துக்கு முதன்முறையாக ஆக்‌ஷன் வெளியீட்டு விழா என்று சண்டைக்காட்சியை திரையிடும் நிகழ்ச்சி நடத்த முதலில் திட்டமிட்டிருந்தார்கள். இப்போதுகூட ரிலீஸுக்கு முன்பே ஒரு நிகழ்ச்சி வைத்து ஆக்‌ஷன் காட்சியை பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக காண்பிக்க ஒரு ஐடியா இருக்கிறது. விஷால் என்றாலே ஆக்‌ஷன் ஹீரோ தான்… பின்னர் துப்பறிவாளனில் மட்டும் என்ன ஸ்பெஷல்? படக்குழுவிடம் கேட்டோம்.

‘விஷால் இதற்கு முன்னர் பல சண்டைக்காட்சிகளில் நடித்து ஆக்‌ஷன் ஹீரோவாக பெயர் எடுத்திருந்தாலும் கூட இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் செம ஸ்டைலிஷாக இருப்பார். படத்தில் மொத்தம் மூன்று சண்டைக்காட்சிகளும் ஒரு சேஸிங்கும் இருக்கிறது. சண்டைக்காட்சிகளுக்காக மட்டுமே படத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். ஹாலிவுட் படங்களில் நம்மை பரவசப்படுத்திய ஆக்‌ஷன் காட்சிகளை நீங்கள் துப்பறிவாளனில் ரசிக்கலாம்.

முதல் ஃபைட்டான மவுத் ஆர்கன் ஃபைட் செட் போட்டு எடுக்கப்பட்டது. விஷால் வாயில் மவுத் ஆர்கன் வைத்து வாசித்துக்கொண்டே போடும் சண்டைக்காட்சி.

இரண்டாவது சண்டை வியட்நாம் சண்டைக்கலைஞர்கள் பாய்ந்து பாய்ந்து தாக்க வரும் சைனீஸ் ஹோட்டல் சண்டை. ஸ்டன்ட் கலைஞர்கள் ஏழு பேரோடு ஒரேடியாக அடுத்தடுத்து சண்டை புதுமையாக இருக்கும்.

க்ளைமாக்ஸில் பிச்சாவரத்தில் ஹீரோவின் கால் கையை கட்டிப்போட்டு ஒரு ஃபைட். மூன்று சண்டைக்காட்சிகளுமே தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்துக்கு எடுத்து செல்லும் சண்டைக்காட்சிகள். அனைத்திலுமே பயன்படுத்தப்பட்டது அனைத்தும் ஒரிஜினல் கத்திகள். அதன் காரணமாகவே நிஜமாகவே காயங்கள் கூட ஏற்பட்டன.

சண்டை காட்சிக்கு கோரியோ தினேஷ் மாஸ்டர்… ஆனால் சண்டை காட்சி இப்படி தான் இருக்க வேண்டும் என்று பேப்பரில் வரைந்து அதை வடிவமைத்தவர் இயக்குநர் மிஷ்கின் தான்’ என்று பரவசப்பட்டது துப்பறிவாளன் படக்குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *