வெப் சீரிசில் கலக்கப் போகும் வடிவேலு?


தனது கலகலப்பான நகைச்சுவையால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

தனது வசனங்களாலும், உடல் மொழியாலும் இன்றும் இளைய தலைமுறையினர் முதல் அனைத்து தரப்பினரையும் ரசிகர்களாக கவர்ந்துள்ளார்.

சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தவர், பின்னர் தெனாலிராமன், எலி போன்ற படங்களில் நாயகனாக உருவெடுத்தார். பின்னர் விஜய்யுடன் மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி வரும் வெப் தொடர்களில் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர். இதனால் நடிகர் வடிவேலுவின் கவனம் வெப் தொடர் பக்கம் திரும்பியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இது குறித்து வருகிற புத்தாண்டில் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.