டிக்டாக்கில் 100 மில்லியன்களை கடந்து விஜய் பாடல் சாதனை!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா போன்றோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. ஏற்கனவே வெளியான ஒரு குட்டி ஸ்டோரி என்ற லிரிக்கல் ஆடியோ ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வாத்தி கம்மிங் என்ற பாடல் வெளியிடப்பட்டது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிக்டாக்கில் 100 மில்லியன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை சோனி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *