விஜய்யின் பிகில் திரைப்படம் – 2 நாளில் 100 கோடி வசூல்


விஜய் – அட்லி கூட்டணியில் கடந்த 25ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “பிகில்”. இதில் விஜய் தந்தை மகன் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கால்பந்தாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

உலகம் முழுவதும் வெளியாகி உள்ள இத்திரைப்படம் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் வெளியான துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்கார் போன்ற திரைப்படங்களும் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *