இன்றைய தலைமுறையை குறிவைத்து தமிழில் தனது OTT சேவையை துவங்கும் VIU

PCCW மற்றும் Vuclip வழங்கும் முன்னணி OTT வீடியோ சேவையான Viu தனது சேவையை இந்தியாவிலும் விரிவுபடுத்தியிருக்கிறது. தமிழ் மொழியில் இன்று துவங்கப்படும் Viu சேவையில் உள்ளூர் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் தமிழ் குறும்படங்கள், வலைத்தொடர்கள், கொரிய நாடகங்கள் ஆகியவை இருக்கின்றன.

தென்கிழக்கு ஆசியாவில் முன்னணி OTT வீடியோ சேவையான Viu, ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்களின் இதயங்களை Love lust confusion, Kaushiki, It happened in Hong Kong, Pilla and Peli gola 1, 2 மூலம் கவர்ந்துள்ளது. நான்கு தமிழ் ஒரிஜினல் சீரீஸ்களுடன், மணிகண்டன் மற்றும் வெங்கட் பிரபு மற்றும் பல இயக்குனர்கள் இயக்கிய விருது பெற்ற குறும்படங்கள், கொரிய நாடகங்கள் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவரும் நோக்கத்தில் உள்ளது Viu.

தமிழ் பொழுதுபோக்கு துறையில் முன்னணியில் உள்ள பலரும் Viu உடன் இணைந்துள்ளனர்.

• தென்னிந்திய சினிமாவின் முன்னோடியும், தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் மிகப்பெரிய விநியோகஸ்தர்களான AP இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்.

• திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர், சமீர் பாரத் ராம் மற்றும் சூப்பர் டாக்கீஸ்

• விஷன் டைம்ஸ் மற்றும் ட்ரெண்ட்லௌட்

• திரு திரு துறு துறு படத்தின் மூலம் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர், இயக்குனர் மற்றும் காமிக்ஸ் படைப்பாளி நந்தினி

• YouTube முன்னணி கண்டெண்ட் தயாரிப்பாளர்கள் Black sheep மற்றும் Fully Filmy

தமிழில் சந்தையில் Viu தனது சேவையை துவங்குவதை பற்றி Vuclip CEO அருண் பேசுகையில், “தமிழ்நாட்டின் இளைஞர்கள் தனித்துவமானவர்கள். அவர்கள் நவீன மற்றும் ஆழ்ந்த கலாச்சாரத்திற்கும் நடுநிலையான பார்வையை உடையவர்கள். அவர்கள் உள்ளூர் பாணியில் சொல்லப்படும் சிறந்த கதைகளை விரும்புபவர்கள். நாங்கள் மிகச்சரியாக அதே மாதிரி விஷயங்களை வழங்க இருக்கிறோம். இந்த சந்தையில் முதலீடு செய்து துறையை மேம்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Viuவின் சேவைகள் www.viu.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். Viuவின் வழக்கமான அறிவிப்புகளை ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஃஇன்ஸ்டாகிராமில் பெறலாம்.

புதிய தமிழ் வலைத்தொடர்கள்:

கல்யாணமும் கடந்து போகும்:
தயாரிப்பு Viu, நலன் குமாரசாமி, சமீர் பரத் ராம் மற்றும் சதீஷ் சுவாமிநாதன்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பத்து சமகால திருமண கதைகளை இந்த தொடர் சொல்கிறது. இந்த பத்து கதைகள் வெவ்வேறு வயதுடைய கதாபாத்திரங்கள், பொருளாதார பின்னணிகள் மற்றும் இடங்களை கொண்டது. அவை அனைத்தும் சொந்த காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்ள விழையும் கதாபாத்திரங்களின் புள்ளியில் இணைகிறது. நையாண்டி அணுகுமுறை மூலம் சொல்லப்படும் ஒவ்வொரு கதையும் திருமணம் என்ற விஷயத்தை பற்றி உங்களை யோசிக்க வைக்கும்.

மெட்ராஸ் மேன்சன்:
தயாரிப்பு: Viu & சூப்பர் டாக்கீஸ்

ராயப்பேட்டையின் ஒரு பழைய மேன்சன் பின்னணியில், பல்வேறு பகுதியிலிருந்து வந்த மக்கள் மற்றும் அவர்களின் மிகப்பெரிய கனவுகளை பற்றிய கதை. இந்த அசாதாரண சரணாலயத்தில் ஒரு ஆர்வமுள்ள இயக்குனர், ஒரு மீம் கிரியேட்டர், ஒரு மார்க்கெட்டிங் மேனேஜர், ரியல் எஸ்டேட் தரகர் மற்றும் பல கதாபாத்திரங்கள் உள்ளன.

Door No 403:
தயாரிப்பு: Viu & Trendloud

முதல் படத்தில் வெற்றி பெறும் ஒரு நடிகர், அவருக்கு கேட்கப்படும் பத்து கேள்விகளை பற்றிய கதை. ஒவ்வொரு கேள்வியும் அவரது வெற்றிக்கு வழிவகுத்த சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி கூறுகிறது. Door No 403 ஒன்றாக வாழும் விசித்திரமான நண்பர்களின் தொகுப்பு மற்றும் அங்கு நடக்கும் சம்பவங்கள் உங்களை சிரிக்க வைக்கும்.

நிலா நிலா ஓடி வா:
தயாரிப்பு: Viu & Make believe production

‘திரு திரு துறு துறு’ இயக்குனர் நந்தினி JS இயக்கியுள்ள, இந்த தொடரில், “அஸ்வின் காகமானு, ஓம் என்ற ஒரு பச்சை குத்தும் கலைஞராக நடித்திருக்கிறார். அவரின் கல்லூரி காதலி நிலா (சுனைனா யெல்லா) ஒரு முழுமையான, கொடூரமான வாம்பயராக மாறி விட்டார் என்பதை உணர்ந்த பிறகு வாழ்க்கை தடம் மாறுகிறது. இந்த அனைத்து முரண்பாடுகள் இருந்த போதிலும் காதலில் விழும் இந்த ஜோடியை பற்றிய, வாம்பயர் பின்னனியை கொண்ட ரொமாண்டிக் காமெடி தொடர்.

குறும்படங்கள்:

மாஷா அல்லா… கணேசா:

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த குறும்படம் மும்பையில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரங்களை பற்றி, முக்கியமான ஒரு திருப்பத்துடன் பேசுகிறது. இந்துக்களுடன் பல ஆண்டுகளாக அமைதியாக சேர்ந்து வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் பெண் மற்றும் அவரது குழந்தைகள் திடீரென அரசியல் காரணங்களுக்காக தூண்டிவிடப்பட்ட கலவரங்களில் சிக்குகிறார்கள். வன்முறையில் இருந்து தப்பிக்க, தங்களுக்கே தெரியாமல் அவர்கள் ஒரு இந்து கோவிலின் கருவறைக்குள் அடைக்கலமாகிறார்கள். மத மற்றும் இனவாத ஒற்றுமை பற்றிய வலுவான ஒரு செய்தியை இந்த குறும்படம் வெளிப்படுத்துகிறது.

The Wind:

கனடா நாட்டு தமிழ் திரைப்பட விழாவில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் விருது பெற்ற குறும்படமான ‘The Wind’ தேசிய விருது இயக்குனர் மணிகண்டன் இயக்கியது. தற்கொலை செய்துகொண்ட ஒரு நபரின் இறந்த உடலைப் பாதுகாக்கும் ஒரு போலீஸ்காரரின் வாழ்க்கையில் உள்ள ஒரு நாள் சித்தரிக்கப்படுகிறது. அரசு பணியாட்கள் வர காத்திருக்கும் நேரத்தில் அந்த காவலருக்கும், இறந்தவருக்கும் இடையே ஒரு வினோதமான தோழமை உருவாகிறது, கடந்த கால மற்றும் தற்போதைய, வாழ்க்கை மற்றும் இறப்பு ஆகியவற்றிற்கு இடையிலான இடைவெளியை அது பிணைக்கிறது. விஜய் சேதுபதி நடித்த இந்த குறும்படம் Viuவில் பிரத்தியேகமாக கிடைக்கும்.