அவனே ஸ்ரீமன் நாராயணா – விமர்சனம்


அமராவதி என்ற நகரத்தில் அபிரர்கள் என்ற கொள்ளைக் கூட்டத்தின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. அவர்கள் ஒரு புதையலைத் தேடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு முன்பாகவே ஒரு நாடகக்குழு அந்தப் புதையலைக் கொள்ளை அடித்து விடுகிறது.

அபிரர்கள் கொள்ளைக் கூட்டத் தலைவன் அந்த நாடகக் குழுவை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்கிறான். இந்நிலையில் மரணப் படுக்கையில விழும் கொள்ளைக் கூட்டத்தலைவன் அடுத்த வாரிசு யார் என்று அறிவிக்காமலேயே இறந்து விடுகிறான். முதல் மனைவிக்கு பிறந்தவர் தான்தான் வாரிசு என அறிவித்து இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவரை கோட்டையை விட்டு வெளியேற்றுகிறார்.

இந்நிலையில் 15 வருடங்களுக்குப் பிறகு அமராவதி நகருக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் நாயகன் ரக்ஷித் ஷெட்டி. புதையலைக் கண்டுபிடிக்க போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் அபிரர் கூட்ட தலைவன், அவனது எதிரி, மறைந்து வாழும் மீதி நாடகக் கலைஞர்கள் ஆகியோர்களை சமாளித்து புதையலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் நாயகன் ரக்ஷித் ஷெட்டி. தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? புதையலைக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது இத்திரைப்படம்.

நாயகன் ரக்ஷித் ஷெட்டி இன்ஸ்பெக்ட்ர் வேடத்திற்கு அருமையாக பொருந்தியிருக்கிறார்.

அபிரர் தலைவனாக பாலாஜி மனோகர். அவரது சகோதர எதிரியாக பிரமோசத் ஷெட்டி தனது நடிப்பை அருமையாக வழங்கியுள்ளார்.

படத்தின் பிரமாண்டத்தை தாங்கி நிற்பவர்கள் படத்தின் ஒளிப்பதிவாளரும், கலை இயக்கநரும் தான். படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளனர்.

மொத்தத்தில் இன்னும் கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தியிருந்தால் “அவனே ஸ்ரீமன் நாராயணா” அனைவரையும் கவர்ந்திருக்கும்.