பட்லர் பாலு – விமர்சனம்


உதவி இயக்குனர் ஆக வேண்டும் என்பதற்காக சென்னையில் தங்கி வாய்ப்பு தேடி வருகிறார் யோகிபாபு. ஆனால் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தினால் வயிற்றுப் பிழைப்பிற்காக இமான் அண்ணாச்சி நடத்தும் கேட்டரிங் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

யோகி பாபுவின் நண்பர்கள் 3 பேர் வேலை தேடி சென்னைக்கு வருகின்றனர். தனது நண்பர்களுக்கு வேலை வேண்டுமென்று இமான் அண்ணாச்சியிடம் கேட்கிறார் யோகிபாபு. இந்த சூழ்நிலையில் படத்தின் நாயகிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அந்த திருமணத்திற்கான கேட்டரிங் பணி இமான் அண்ணாச்சிக்கு கிடைக்கிறது. அது ஒரு பெரிய ஆர்டர் என்பதால் யோகிபாபுவுடன் அவரது நண்பர்கள் மூவரையும் வேலைக்கு சேர்த்துக் கொண்டு அங்கு செல்கிறார் இமான் அண்ணாச்சி.

அந்த திருமணத்தில் டெக்கரேஷன் வேலைக்காக மயில்சாமியும், தாடி பாலாஜியும் வருகின்றனர்.

திருமணத்துக்கு முன் நாயகியை கடத்த திட்டமிட்டுகிறார் நாயகியை ஒருதலையாக காதலித்த வில்லன். நாயகியைக் கடத்துவதற்காக ரோபோ சங்கர் உள்ளிட்ட இரண்டு அடியாட்களை அனுப்பி வைக்கிறார்.

இவர்களுக்கு முன் யோகி பாபுவின் நண்பர்களான நாயகன், நாயகியை கடத்திச் செல்கிறான். இதனால் நாயகியின் தந்தை போலீசில் புகார் கொடுத்து தேடுகிறார்கள். இறுதியில் நாயகியை யோகி பாபுவின் நண்பர்கள் கடத்தியது ஏன்? நாயகியை தேடி கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் முதல் பாதியில் யோகிபாபு, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, தாடி பாலாஜி ஆகிய காமெடி பட்டாளங்கள் படத்தை நகைச்சுவையாக கொண்டு செல்கிறார்கள்.

இரண்டாம் பாதியில் வரும் காதல் காட்சிகள் சிறிதளவு சோர்வை ஏற்படுத்தினாலும் கிளைமாக்சை ரசிக்க வைத்திருக்கிறார்கள். கணேஷ் ராகவேந்திரா இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் காமெடி கலாட்டாவாக வெளிவந்துள்ளது இந்த “பட்லர் பாலு”

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *