புரூஸ் லீ – விமர்சனம்


புரூஸ்லீ என்ற பட்டப் பெயர் இருந்தும் பயந்தாங்குளியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு போலீஸ் என்றால் ரொம்ப பயம். அவரது காதலி கீர்த்தி கர்பந்தா.. நகரத்தின் மிகப்பெரிய ரவுடியான முனீஸ்காந்த் அமைச்சர் மன்சூர் அளிகானையே போட்டுத்தள்ளுவதை ஜி.வி புகைப்படம் எடுக்க, அந்த விவரம் வில்லனுக்கு தெரியவர நாயகனும், நாயகியும் அவனிடமிருந்து தப்பிக்கப்படும் பாடும்,, அவனை போலீஸில் பிடித்துக் கொடுக்க எடுக்கும் முயற்சியும் தான் படத்தின் மீதிக்கதை.

இதுவரையிலான அவரது படங்களில்எப்படி நடித்தாரோ, அதிலிருந்து கொஞ்சம்கூட மாறாமல் அப்படியேஇந்த படத்திலும் நடித்திருக்கிறார். அவரது நடிப்பினால் இதுவரை சற்று அதிருப்தியில் இருந்தவர்களுக்கு, இந்த படத்தைப் பார்த்ததும் மேலும்கோபம் கூடும் என்பது நிச்சயம்… ரூட்டை மாத்துங்க பாஸ் என தியேட்டரில் அலறுகிறார்கள்.

ஜி.வி.யின் ஜோடியாக வரும் கீர்த்தி கர்பந்தா குளுகுளு குல்பி ஐஸாக இந்த கோடை வெயிலில் தனது ரொமாண்டிக் மற்றும் கவர்ச்சியான நடிப்பால் கிளுகிளுப்பூட்டுகிறார். எப்போதும்போல ஹீரோவை கலாய்க்கும் வேலையை இந்தப்படத்திலும் சரியாக செய்திருக்கும் பால் சரவணனுக்கு இதில் கோடை ஆபராக ஒரு ஜோடியையும் கொடுத்திருக்கிறார்கள்.

அமைச்சரையே பொசுக்கென போட்டுத்தள்ளி டெரர் காட்டினாலும் கூட, வழக்கம்போல் அவரது கோமாளித்தனங்களையும் குறைவில்லாமல் செய்திருக்கிறார் முனீஸ்காந்த். போலீஸ் அதிகாரி ஆனந்தராஜ், அமைச்சர் மன்சூர் அலிகானை இன்னும் கொஞ்சம் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். நான் கடவுள் ராஜேந்திரன் எல்லாம் டைரக்டர் கைப்பொருள்.. நல்லவிதமாக கையாண்டால் நல்ல பெர்பாமன்ஸ் தருபவர்.. ஆனால் இதில் அது மிஸ்ஸிங்..

படத்திற்கு உலகப் புகழ்பெற்ற ‘புரூஸ் லீ” என்ற ஆக்ஷன் ஹீரோவின் பெயரையே டைட்டிலாக வைத்துவிட்டு, சண்டை காட்சியில் கவனம் செலுத்தாததும், எந்த ஒரு இடத்திலும் வலுவாக அடையாளப்படுத்த முயற்சிக்காமல் அப்படியே விட்டுவிட்டதும் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின் சிரத்தையின்மையையே காட்டுகிறது..

பாலாவின் படமாவது ஜி.வி.பிரகாஷின் நடிப்பையும் ரூட்டையும் மாறுகிறதா என வெயிட் பண்ண வேண்டியதுதான்.. வேறென்ன பண்ணுவது..?