தோனி கபடி குழு – விமர்சனம்


கிராமத்தில் காலியாக கிடந்த கிரவுண்டில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் சிலருக்கு திடீர் சோதனையாக அங்கே இனி விளையாட கூடாதென கூறப்படுகிறது,. நிலம் யாருக்கோ கைமாறுவதை அறிந்த நாயகன் அபிலாஷ் நண்பர்கள் உதவியுடன் நிலத்தை தாங்களே வாங்க முடிவுசெய்து பணம் திரட்டுகிறார்கள்.

கடைசியாக ஒரு இருபதாயிரம் ரூபாய் குறைய, டீக்கடை நடத்தும் கபடி ஆர்வலர், பக்கத்து ஊரில் நடக்கும் கபடி மேட்ச்சில் கலந்துகொண்டு ஜெயித்தால் முப்பதாயிரம் கிடைக்கும் என கூறி அழைத்து செல்கிறார். கிரிக்கெட்டையே உயிர் மூச்சாக நினைக்கும் இந்த இளைஞர்கள் கபடி விளையாட சென்ற இடத்தில் எதிர்பாராத பகை தலை தூக்குகிறது.. இதையெல்லாம் சமாளித்து அவர்களால் வெற்றி பெற முடிந்ததா, அந்த காலி கிரவுண்டை கைப்பற்ற முடிந்ததா என்பது மீதிக்கதை.

ஏற்கனவே வெண்ணிலா கபடி குழு என்கிற ஹிட் படத்தில் கபடி விளையாட்டை டீடெய்லாக பார்த்துவிட்ட நமக்கு இதில் என்ன புதிதாக சொல்லிவிட போகிறார்கள் என்கிற சந்தேகம் ஏற்படுவது இயல்பே.. இதில் கபடி விளையாடும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் தான் உயிர்மூச்சு என்பதே வித்தியாசம் தான். அதுமட்டுமல்ல, நிர்பந்தம் காரணமாக கபடி விளையாட போகிறார்கள் என்பதும் அந்தப்படத்தில் இருந்து இந்தப்படத்தை வேறுபடுத்தி காட்டவே செய்கிறது.

ஆனால் திரைக்கதை..? இடைவேளைக்கு பின்னால் வரும் கபடி போட்டிகள், அவற்றின் முடிவுகள் எல்லாம் இயக்குனர் தனது வசதிகேற்றபடி வளைத்துக்கொண்டு படமாக்கியுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது. நாயகன் அபிலாஷ் இயக்குனர் சொல்லிக்கொடுத்தபடி நடித்துள்ளார். கூட்டத்தோடு ஒருவர் போல வந்துசெல்வதால் அது மிகப்பெரிய குறையாகவும் தெரியவில்லை. அழகான நாயகியாக லீமா ரோஸ் கவனம் ஈர்க்கிறார். கபடிக்கு உத்வேகம் அளிக்கும் அந்த கோச் பிரமாதப்படுத்துகிறார்.

நமது பாரம்பரிய விளையாட்டான கபடியை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக படம் இயக்கிய இயக்குனர் ஐயப்பனை அதற்காக மட்டும் பாராட்டலாம்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *