இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம்

வக்கீல் வரது : விஜய் ஆண்டனி, சுஷ்மா கேரக்டர்களை வக்கீலாக்கி எங்களை கலாய்ச்சுருக்காங்க.. நாங்கல்லாம் என்ன கேஸ் கிடைக்காம ஆள் பிடிக்க அலைஞ்சுக்கிட்டா இருக்கோம்.. ஆனா காமெடி படம்ங்கிறதால சும்மா விடுறோம்.

புரோக்கர் புண்ணியகோடி : ஜெகன் வீட்டு புரோக்கரா வர்றதெல்லாம் ஒகே தான்.. அவருக்கு கிடைக்கிற மாதிரி ஒரே நாள்லயே பத்தாயிரம் ரூபாய்லாம் கமிஷன் கிடைக்காதுப்பா.. அவரு காமெடிய விட இது பெரிய காமெடியா இருக்கேப்பா..

ஆட்டோ ட்ரைவர் ஆனந்த் : விஜய் ஆண்டனி தனியா காமெடி பண்ணி ரிஸ்க் எடுக்காம மத்தவங்க பண்ற காமெடி சீன்ல கச்சிதமா நுழைஞ்சு அளவா பேசி எஸ்கேப் ஆயிட்டாருங்கோ.. ஹீரோயின் யாருப்பா…? என்னது சுஷ்மாவா..? பல நேரம் பாக்குறதுக்கு அனுஷ்கா மாதிரி தெரியுது.. அதோட நல்லாவும் நடிச்சுருக்கப்பா.

செக்யூரிட்டி சென்ராயன் : என் தலைவன் எம்.எஸ்.பாஸ்கர் தான்ப்பா அசால்ட் பண்ணிட்டாரு.. “எம்பாட்டனுக்கு முப்பாட்டன்னு” அவர் ஒவ்வொரு தபா டயலாக்க ஆரம்பிக்கிறப்பவும் ஒரே கலாட்டா தான். நம்ம பசுபதி கூட காமெடில எறங்கி அடிச்சுருக்காறேப்பா..

சூப்பர் மார்க்கெட் சுப்பு : சார்.. காளி வெங்கட் தான் சூப்பர்.. ‘சிடி’ய ஒரு காப்பி எடுக்கணும்னு விஜய் ஆண்டனி சொல்றத தப்பா புரிஞ்சுட்டு பக்கத்துவீட்டு மாமிகிட்ட பால் பாக்கெட் வாங்கிட்டு வந்து காபி போடுவாரு பாருங்க.. அங்க சிரிக்காதவன் பாக்கி இல்ல சார் தியேட்டர்ல..

கல்லூரி மாணவன் கணேஷ் : மொத ரெண்டு படத்துலயும் நெறையா லாஜிக் பாத்து நடிச்சிருந்தாரு விஜய் ஆண்டனி.. ஆனா இது காமெடி படம்ங்கிறதாலயோ என்னமோ லாஜிக்கை எல்லாம் அவுத்து வுட்டுட்டாங்க போல.. இருந்துட்டு போகுது சார்.. கொடுத்த காசுக்கு படம் முழுக்க சிரிக்க வைக்கிறாங்கள்ல அது போதும் சார்.

பூக்காரி புஷ்பா : அந்த பொண்ணு நல்லா இருக்குதுப்பா.. துணிக்கடைல நிக்குற மனோபாலாவ பொம்மைன்னு நெனச்சு ட்ரெஸ் போட தூக்கிட்டு போவாங்க பாரு….

பெட்ரோல் பங்க் பெருமாள் : சார் அந்த வில்லன் போலீஸா நடிச்சிருக்குறவரு ‘பாண்டியநாடு’ படத்துல வர்ற வில்லன் தானே..? நல்லா பண்ணிருக்கார் சார். கடைசில அவரையும் காமெடி ஆக்கிட்டாங்க. பாவம்

கேண்டீன் கேசவன் : ஏங்க.. விஜய் ஆண்டனி மியூசிக் போடாம யாரோ தீனா தேவராஜன்னு ஒருத்தார் பண்ணிருக்கார்போல.. மக்கயாலா, மஸ்காரா போல எதுனா இருக்கும்னு பார்த்தா ஏமாத்திட்டாங்க சார்..

திண்டுக்கல் தினேஷ் : சார் எங்க ஊரு தியேட்டர்ல நல்ல ரெஸ்பான்ஸ் சார்.. பக்கத்துல இருக்குற ஆளு சிரிச்சு சிரிச்சு என் தோளு மேல சாஞ்சு சாஞ்சு எனக்கு தோள்பட்டை வலியே வந்துருச்சு சார்.. டைரக்டர் ஆனந் நல்லா பண்ணிருக்கார். ஆனா என்ன.. நீளத்த மட்டும் கொஞ்சம் கொறச்சிருக்கலாம்.. ‘பி&சி” லயும் விஜய் ஆண்டனி ரீச்சாயிருவார் போலத்தான் தெரியுது..

குறிப்பு: இவங்கள்லாம் இந்தப்படத்தை பாத்தா இப்படித்தான் சொல்வாங்க.