மதுரராஜா – விமர்சனம்


கேரளாவில் தனித்தீவு போல் ஒரு பகுதி உள்ளது. அந்த பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் ஜெகபதி பாபு. அங்கு தனி ராஜாங்கமே நடத்துகிறார். பள்ளக்கூடத்திற்கு அருகில் மதுபானக்கடை நடத்தி குழந்தைகளுக்கு தொல்லை தருகின்றனர் கெஜபதி பாபுவின் ஆட்கள்.

இதை விசாரிக்க மம்முட்டியின் தந்தையான நெடுமுடி வேணுவை அனுப்பி வைக்கிறது பள்ளி நிர்வாகம். ஆனால் அவரை பொய்யனா அறிக்கை கொடுக்கும் படி மிரட்டி வற்புறுத்துகிறது அந்த கும்பல். இந்நிலையில் மம்முட்டியின் வளர்ப்பு தம்பியான ஜெய் அந்த ஊருக்கு வந்து அவர்களை தட்டிக்கேட்கிறார்.

ஆனால் ஜெய் மீது பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புகிறது அந்த கும்பல். இந்நிலையில் மதுர ராஜாவான மம்முட்டி அங்கு வருகிறார். அவர்களுடன் கோதாவில் இறங்குகிறார். மம்முட்டி ஜெய்யை மீட்டாரா? ஜெகபதி பாபுவின் பிடியிலிருந்த தீவை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்ற சூப்பர் ஹிட் படம் ‘போக்கிரி ராஜா’ அந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது இந்த ‘மதுர ராஜா’.

இரண்டு படங்களுக்கும் பத்து ஆண்டு இடைவேளை உள்ளது. ஆனாலும் மம்முட்டியின் தோற்றத்தில் எந்தவித மாறுதலும் காணமுடியவில்லை. ஆச்சரியம் தான். சண்டைக்காட்சிகளில் தனி ஒரு ஆளாக அதிரவைக்கிறார் மம்முட்டி. தப்பும் தவறுமாக மம்முட்டி பேசும் ஆங்கிலம் மொத்தப்படத்தையும் நகைச்சுவையுடன் நகர்த்துகிறது.

படத்தின் மற்றொரு கதாநாயகன் ஜெய். அவருக்குரிய முக்கியத்துவம் குறையாதபடி சண்டைக்காட்சி, சன்னி லியோனுடன் ஐட்டம் டான்ஸ் என சகலமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் சிறப்பாக செய்திருக்கிறார்.

வில்லனாக வலம் வரும் ஜெகபதி பாபு இந்த படத்திலும் வழக்கம் போல தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மஹிமா நம்பியார், பூர்ணா, அனுஸ்ரீ ரேஷ்மா ராஜன் என ஒன்றுக்கு நான்கு கதாநாயகிகள் அழகு பதுமையாக வந்து கவர்கிறார்கள். ஆர்.கே.சுரேஷ் வில்லத்தனத்தில் வழக்கம் போல ஸ்கோர் செய்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் பரிதாபம் அள்ளிக் கொள்கிறார் நரேன்.

இசையமைப்பாளர் கோபிசுந்தர் தன் இசையால் மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார். ஒரே ஒரு தனித்தீவில் மொத்த படத்தையும் அழகியலோடு படமாக்கி முடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார்.

இடைவேளை வரை படம் போவதே தெரியாமல் கதையை நகர்த்தியிருக்கும் இயக்குனர் வைசாக். இடைவேளைக்கு பிறகு படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் கொண்டு போயிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் ’மதுர ராஜா’ போக்கிரி ராஜாவை விட வேகம் குறைவு.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *