மாயநதி – விமர்சனம்


படத்தின் நாயகி வெண்பா சிறுவயதிலேயே தாயை தாயை இழந்து விடுகிறார்.
தனது தந்தையான ஆடுகளம் நரேன் ஆதரவில் வளர்ந்து வருகிறார் நாயகி வெண்பா. நாயகி வெண்பாவுக்கு மருத்துவராக ஆக வேண்டும் என்பதே ஆசை. பிளஸ் டூ படிக்கும் நாயகி வெண்பாவிற்கு ஆட்டோ ஓட்டுனராக வருகிறார் நாயகன் அபி சரவணன். இந்நிலையில் ஒரு காதல் பிரச்சனையில் நாயகி வெண்பா மீது ஒருவர் ஆசிட் வீசி வருகிறார். இதிலிருந்து வெண்பாவை அபி சரவணன் காப்பாற்ற இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.

இந்த காதலால் வெண்பாவால் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏற்கனவே பல காதல் தோல்விகளை சந்தித்த அபி சரவணன் இந்த காதலாவது நிலைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதனால் உடனடியாக வெண்பாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.

இறுதியில் வெண்பாவின் மருத்துவராக வேண்டும் என்ற கனவு நிறைவேறியதா?இருவருக்குமிடையிலான காதல் என்னவானது? இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? இந்த காதல் வெண்பாவின் தந்தை ஆடுகளம் நரேனுக்கு தெரிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் அபி சரவணன் ஆட்டோ ஓட்டுனராக அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது நாயகி வெண்பாவின் நடிப்பு. டாக்டர் ஆக வேண்டும் என்கிற அவரது தவிப்பு, அப்பாவின் பாசத்திற்கு ஏங்கும் மகள், அபி சரவணன் உடனான காதல் என நடிப்பின் தனது பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார் நாயகி வெண்பா.

அபி சரவணனின் நண்பராக வரும் அப்புக்குட்டி, வெண்பாவின் தந்தையாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோர் அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்கள்.

மருத்துவரான அசோக் தியாகராஜன், சினிமா மீது உள்ள காதலால் இப்படத்தை இயக்கி இருக்கிறார். படிப்பில் சிறந்து விளங்கும் பெண்ணின் வாழ்க்கையில் காதல் நுழைந்தால் அவர்களின் எதிர்காலம் எப்படி செல்லும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார்.

பவதாரிணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

ஸ்ரீனிவாசின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் இன்றைய சமூகத்தை அப்படியே பிரதிபலிக்கிறது இந்த ‘மாயநதி’ திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *