ஒங்கள போடணும் சார் – விமர்சனம்


நாயகன் ஜித்தன் ரமேஷ், நாயகி சனுஜா சோமநாத். இருவரும் காதலித்து வருகின்றனர்.

நாயகன் ஜித்தன் ரமேஷ் தனக்கு இருக்கும் கடனை அடைத்து விட்டு காதலியுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க, தான் நடத்தி வரும் தொலைக்காட்சி சேனலில் வித்தியாசமான நிழச்சியை ஒளிபரப்ப முடிவு செய்யும் மனோபாலா, தனியாக இருக்கும் ஒரு பங்களாவில் பேய் இருப்பதாகவும் மக்கள் யாருமே அங்கு செல்ல பயப்படுவதையும் அறிந்து கொள்கிறார்.

உடனே ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார் மனோபாலா. அந்த பங்களாவில் ஒரு வாரம் தங்கியிருப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவிக்கிறார்.

கடனில் இருக்கும் நமது நாயகன் ஜித்தன் ரமேஷ் உள்ளிட் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அந்த பங்களாவிற்குள் செல்கின்றனர்.

அதன் பின் நாயகனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாது, வீட்டிற்குள் 2 பேரும், வெளியில் ஒருவரும் இறந்து விடுகின்றனர்.

உண்மையிலேயே அந்த பங்களாவில் பேய் இருக்கிறதா? இல்லையா? அங்கு சென்றவர்கள் கதி என்ன ஆனது ? நாயகன் ஜித்தன் ரமேஷின் நடவடிக்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டது? என்பதே படத்தின் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஜித்தன் ரமேஷ்.
படத்தின் இரண்டாம் பாதியில் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜித்தன் ரமேஷ்.
கஜேஷ் நாகேஷ், கல்லூரி வினோத் ஆகியோர் இயக்குநர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இவரது பாடல்கள், வசனம், நடிப்பு ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

அடல்ட் காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித். ஆனால், அடல்ட் காமெடி பெரியதாக எடுபட வில்லை என்றே சொல்லலாம். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் தெளிவாக அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ரெஜி மோன் இசை அமைத்துள்ளார். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். கண்களுக்கு விருந்தாக செல்வகுமாரின் ஒளிப்பதிவு ஒரு ப்ளஸ் பாயிண்ட்.

மொத்தத்தில் அடல்ட் வயதில் இருப்பவர்களுக்கான படமாக அமைந்துள்ளது இந்த திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *