பச்சை விளக்கு – விமர்சனம்


படத்தின் நாயகன் மாறன். சாலை விதிகளை பற்றி பி.எச்.டி முடித்து விட்டு சாலையில் சமூக சேவை செய்து வருகிறார். நாயகி தீஷா ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வருகிறார். அவர் நாயகன் மாறனிடம் சிக்க நாயகிக்கு வித்தியாசமான ஒரு தண்டனையை கொடுக்கிறார் மாறன். இதிலிருந்து நாயகன் மாறன் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறார் நாயகி தீஷா. ஒரு கட்டத்தில் நாயகனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில் நாயகி தீஷாவின் சகோதரி ஆபாச படம் எடுத்து மிரட்டும் கும்பலிடம் சிக்கி கொள்கிறார். இது நாயகன் மாறனுக்கு தெரிய வர தீஷாவின் சகோதரியை காப்பாற்ற முயல்கிறார்.

இறுதியில் அந்த கும்பலிடம் இருந்து தீஷாவின் சகோதரியைக் காப்பாற்றினாரா? அந்த கும்பலை என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தை இயக்கியிருக்கும் மாறனே நாயகனாக நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் மாறன்.

அவருடைய வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பலருக்கும் தெரியாத சாலை விதிகளைப் பற்றி சொல்லிய மாறனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தின் முதல் பாதியில் சாலைவிதிகளை ஏன் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் கூறியுள்ளார்.

இரண்டாம் பாதியில் செல்போனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சொல்லியிருக்கிறார். தவறாக செல்போனை உபயோகப்படுத்தினால் மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் தீஷா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். டிராபிக் போலீசாக வரும் இமான் அண்ணாச்சி சிந்திக்க வைத்திருக்கிறார்.

தாரா, மனோபாலா, நெல்லை சிவா, நந்தகுமார், நாஞ்சில் விஜயன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக வந்துள்ளது. தனது சிறப்பான ஒளிப்பதிவால் அனைவரையம் கவனிக்க வைத்திருக்கிறார் பாலாஜி.

மொத்தத்தில் அனைவரும் பார்த்து பின்பற்ற வேண்டிய ஒரு பாடம் இந்த ‘பச்சை விளக்கு’ திரைப்படம்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *