வி.ஐ.பி-2 ; விமர்சனம்

மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் ‘வி.ஐ.பி-2’ அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற தீனி போட்டிருக்கிறதா..?

முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் கன்ஸ்ட்ரக்சன் தொழிலையே கதைக்களமாக்கி கபடி போட்டி ஆடிகிறார்கள். மிக பெரிய கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி முதலாளி ஆன கஜோல் அனைத்திலும் நம்பர் ஒன் ஆக இருக்க விரும்புக்கிறார். ஆனால் எதிர் கம்பெனி ஆளான தனுஷ் இவரது ஆணவத்திர்க்கு அடிபணிய வைக்கிறார். இந்த ஈகோ யுத்தம் எப்படி முடிவுக்கு வருகிறது என்பது தான் மீதி கதை.

முதல் பாகத்தில் இருந்த சுரபியை தவிர்த்து மற்ற அனைவருமே இந்த இரண்டாம் பாகத்திலும் இருக்கிறார்கள். தனுஷ் நடிப்பு வழக்கம் போல சுறுசுறு. ஆனால் ஆரம்ப காட்சியில் அவர் சரக்கு அடித்துவிட்டு சலம்புவது ரொம்பவே ஓவர். அமலாபாலை எதற்காக சேர்த்தார் என்றே தெரியவில்லை. வரும் காட்சிகளில் எல்லாம் கத்திகொண்டே இருக்கிறார். கஜோலின் நடிப்பில் மிடுக்கு பிளஸ் கம்பீரம் கடைசி காட்சியில் அவரது மாற்றம் இயல்பாக காட்டப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

சமுத்திரகனி, விவேக், நினைவு காட்சிகளில் வரும் சரண்யா ஆகியோர் முதல்பாகத்தின் உணர்வை இந்த படத்திலும் தொடர வைக்கிறார்கள். பாடல்கள் என்றாலே குத்து தானா என கஷ்ட படுத்துகிறார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். எப்போதுமே இரண்டாம் பாகத்திற்க்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது வாடிக்கைதான். ஆனால் இந்த படத்தில் அந்த எதிர்பார்ப்பில் பாதியை நிறைவேற்றவே நிறைய சிரம பட்டுயிருக்கிறார் இயக்குனர் சௌந்தர்யா.

திருமணமானதால் தனஷ் அடிகடி குடிப்பதாக சொல்லும் காட்சிகள், தம்பியின் வேலைக்கு பணம் கட்டுவதற்காக வி.ஆர்.எஸ். வாங்கியதாக சமுத்திரகனி காரணம் சொல்வது, கிளைமேக்சில் இடம்பெறும் மழைகாட்சி என நிறைய விஷயங்களில் நியாயமே இல்லாமல் லாஜிக்கை மீறி இருக்கிறார்கள். படத்தின் முதல் இருபது நிமிடம் காட்சிகளையும்,அமலா பாலையும் தவிர்த்திருந்தால் வி.ஐ.பி-2 உம் ஒரு விறுவிறுப்பான படமே.