ஓரு காலத்தில் பெரிய வெற்றி பெற்று பேசப்பட்ட படம் “வைதேகி காத்திருந்தாள்” அதன் பாடல்கள் இன்றும் எங்காவது ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன்.
அப்படி ஒரு மியூசிக்கல் ஹிட் அந்தப்படம். அதை தயாரித்தது அப்பு மூவீஸ் புரொடக்ஷ்ன்ஸ் அதன் தயாரிப்பாளர் தூயவன்.
அடிப்படையில் இவர் ஓர் எழுத்தாளர். பல படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் விலங்கியளர்.
தன் அப்பு மூவீஸ் புரொடக்ஷ்ன்ஸ் மூலம் ” வைதேகி காத்திருந்தாள்” போல “உள்ளம் கவர் கள்வன்”,”நானே ராஜா நானே மந்திரி” போன்ற படங்களையும் தயாரித்தவர்.
எஸ்.டி கம்பென்சுடன் இணைந்து ” விடியும் வரை காத்திரு” “கேள்வியும் நானே பதிலும் நானே” படங்கள் மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தையும் தயாரித்தவர் இவர்.
சற்று இடைவெளிக்குப்பின் அப்பு மூவீஸ் இப்போது ஒரு படத்தைத் தயாரிக்கிறது. ” கதம் கதம் ” என்பதுதான் படத்தின் பெயர். ” பாபா ” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கூறிய பிரபல வசனம்தான் ” கதம் கதம் “அதையே தலைப்பாக்கி இப்படம் உருவாகி இருக்கிறது.
நட்ராஜ் என்கிற நட்டி மற்றும் நந்தா பிரதான வேடமேற்று நடித்துள்ளனர்.சனம் ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். தாஜ்நூர் இசையமைக்க யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.தூயவனின் மகன் பாயு தூயவன் இயக்கியுள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளராக பாலிவுட் வரை போய் கலக்கி வருபவர் நட்டி என்று செல்லமாக அழைக்கப்படுபவரான நட்ராஜ் சுப்ரமணியம்.
‘ நாளை ‘ ‘ சக்கரவியூகம் ‘ ‘ மிளகா ‘ ‘முத்துக்கு முத்தாக’ படங்களில் மூலம் ஒரு நடிகராக அறியப்பட்ட இவர் அண்மை வெற்றிப் படமான ” சதுரங்க வேட்டை” மூலம் நட்சத்திர நாற்காலியை நடிகராக கைப்பற்றி கொண்டிருக்கிறார்.
‘ மௌனம் பேசியதே ‘ மூலம் அறிமுகம் ஆன நந்தா அதன் பின்னர் வந்த ‘ஆனந்த புரத்து வீடு’ ‘புன்னகை பூவே’, ‘ஈரம்’,’அதிதீ’,’வந்தான் வென்றான்’ படங்களின் மூலம் தன் நடிப்புத் திறமையை நிரூபித்து உள்ளவர். நட்டியும் நந்தாவும் தங்கள் அனாயாசமான நடிப்பில் துவம்சம் செய்வதே ” கதம் கதம் ” படத்தின் சிறப்பு அம்சம் எனலாம்.
” கதம் கதம் ” Law and Dis Order” அதாவது சட்டமும் ஒழுங்கீனமும் டேக்லைன் போட்டுள்ளார்கள். இது எதைக் குறிக்கிறது என்பதே கதை.
இது ஒரு போலீஸின் கதை என்று கூட கூறலாம். “கதம் கதம் ” என்று கூறி யாரை யார் வதம் செய்கிறார்கள் என்பதே சஸ்பென்ஸ் காக்கி உடையில் கலக்கியுள்ளார் நந்தா அவருடன் போட்டி போட்டு பின்னியுள்ளார் நட்டி.
பல திறமைகள் கலைஞர்கள் பங்கேற்பில் உருவாகியுள்ள “கதம் கதம் ” ஆடியோ விரைவில். படமும் திரையில் வெகு விரையில் வெளிவரும்.