இப்படத்தின் கதாநாயகி அஞ்சனா கீர்த்தி தனது ஜம்போ அனுபவத்தை கூறுகையில் “ இப்படத்தில் வேலை செய்தது பல அருமையான அனுபவங்களை தந்தது. இயக்குனர்கள் ஹரி- ஹரீஷ் உடன் பணிபுரிவது மிக இனிதான ஒன்றாய் அமைந்தது. இவர்கள் இருவரும் வேகமாகவும், விவேகமாகவும் வேலை செய்ய கூடியவர்கள்.
“ படத்தில் ஒரு காட்சியில் நான் ஜப்பான் பதுமையாக நடிக்க வேண்டியிருந்தது. எனக்கு கண் இமைக்காமல், சலனமற்ற பொம்மையாக அசைவில்லாமல் நடிக்க சொல்லி கொடுத்தார். மேலும், அழகிய பேபி ஹம்சிகா இப்படத்தில் முக்கியமான கதாப்பதிரத்தில் நடித்திருக்கிறார்.”
“ படத்தின் 90% ஜப்பானின் டோக்யோ, டோயாமா நகரங்களில் படமாக்கப்பட்டுள்
“ஜப்பானிய நடிகர் நடிகைகளுடன் நடித்தோம். ஜப்பான் பத்திரிக்கைகளில் எங்களை பற்றி செய்திகள் வந்தது மிகவும் பெருமையாக இருந்தது. நகைச்சுவைமிக்க 3D படமாய் உருவாகி வரும் இப்படம் குழந்தைகளை மிகவும் கவரும்.” என கூறினார் அஞ்சனா.